ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

முரட்டு ருசியில் முட்டை சுக்கா.. இப்படி செய்யுங்கள்

அசைவ பிரியர்கள் அனைவரும் மீன் ,மட்டன், சிக்கன், இறால் ,வாத்து ,கோழி என வகை வகையாக உண்பர். அவர்களுக்கு உணவின் வகைகள் ஏராளம் .ஆனால் அசைவ உணவை சாப்பிடாத பல பேருக்கு அசைவு விருந்து வைக்கும் உணவாக முட்டை உள்ளது. இப்பொழுது முட்டையை சைவத்தில் கூட சேர்த்து விட்டனர். சைவ பிரியர்கள் கூட இப்பொழுது முட்டை சாப்பிட்டு வருகின்றனர். தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சனை நீங்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுவர். அதுபோல் குழந்தைகளுக்கு முட்டையை உணவில் பிசைந்து ஊட்டி விடும் வழக்கம் உண்டு. மேலும் வயதானவர்களுக்கு அதிகமாக மீன் ,சிக்கன், மட்டன் என எடுத்துக் கொள்ள முடியாது சில பேருக்கு அது அஜீரணக் கோளாறாக இருக்கும் .ஆனால் அவர்களுக்கு கூட முட்டையை உணவில் கொடுப்பர். அது அவர்களுக்கு அசைவ விருந்தாக இருக்கும் இவ்வாறு முட்டையின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பயனுள்ள முட்டையை வகை வகையாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் அதுவும் மிக எளிதான முறையில் மிக ருசியாக இருக்கும் என்றால் நமது அனைவருக்கும் கிடைத்த ஜாக்பாட் தானே வாருங்கள் முட்டை சுக்கா செய்யும் முறையை பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைத்த முட்டை – 5

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கிராம்பு ,சோம்பு ,பட்டை ஆகியவை சிறிதளவு

உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு

நறுக்கிய பெரிய வெங்காயம் சிறிதளவு

நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு

முட்டை சுக்கா செய்யும் முறை

முட்டை சுக்கா செய்யும் முறை என்னவென்றால் முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கிராம்பு சிறிதளவு சோம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதில் காய்ந்த மிளகாய் இரண்டை போட்டு உடன் வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் சிறிதளவு கறிவேப்பிலை ,நறுக்கிய பெரிய வெங்காயத்தை எடுத்து பொன்னிறமாக வரும் வரை நன்றாக அதில் வதக்கி எடுக்கவும். மேலும் அதில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள்,மிளகுத்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு ஏற்கனவே நாம் வேகவைத்த முட்டையை எடுத்து அதில் மஞ்சள் கருவை மட்டும் பிரித்து எடுத்து விட்டு வெள்ளை கருவை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். இதன்பின்பு நாம் பாதிக்க வைத்த மசாலாவில் துண்டு துண்டாக நறுக்கிய வெள்ளை கருவையும் அதன் பின் மஞ்சள் கருவையும் சேர்த்து நன்றாக வதக்கவும் சிறிது நேரம் கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிட நேரத்திற்கு வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சூடான மிக மிக ருசியான முட்டை சுக்கா ரெடி இதனை நீங்கள் சாப்பாட்டிலும் பிசைந்து சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி போன்றவற்றிற்கு சேர்த்து உண்டால் மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.

அசைவ உணவு எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்த முட்டை சுக்காவை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமும் அசைவ விருந்து சாப்பிட்ட உணர்வும் உங்களுக்கு கிடைக்கும் இந்த எளிதான முட்டை சுக்கா ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *