உளுந்து பால் தரும் உலக லெவல் ஆரோக்கியம்
பாஸ்ட்புட் உணவுகளை விரும்பி சாப்பிடும் நாம் அனைவரும் பாரம்பரிய உணவுகளை முற்றிலுமாக மறந்து விட்டோம். அதனால் தான் இப்பொழுது நோய்களும் மருத்துவமனைகளும் அதிகரித்து விட்டன. கண்ணுக்கே தெரியாத நோய்களும் காரணமே இல்லாமல் மருத்துவமனைகளும் அதிகமாகி விட்டது. முந்தைய காலகட்டத்தில் இவ்வளவு நோய்கள் இருந்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாராவது சிந்தித்துப் பார்த்தீர்களா.. ஆம் முன்னோர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். அதனால்தான் அவர்கள் மனமும் தைரியமாக இருந்தது. மறந்துவிட்ட பாரம்பரியத்தை சற்று நினைவுபடுத்தி நாமும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

பாரம்பரியம் உளுந்து பால் செய்ய தேவையான பொருட்கள்
உளுந்து – 1/2 கப்
நாட்டு சர்க்கரை – 1/2 கப்
பசும்பால் அல்லது தேங்காய் பால் – 1/2 கப்
நறுக்கிய முந்திரி பாதாம் பிஸ்தா – தேவையான அளவு
உளுந்து பால் செய்முறை
ஒரு கப் அளவு உளுந்தை எடுத்து நன்றாக இரண்டு மூன்று முறை கழுவி கொள்ளவும். பின்பு அதனை ஒரு குக்கரில் போட்டு ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மூடி விடவும். ஐந்து விசில் வந்தவுடன் ஆஃப் செய்து சிறிது நேரம் ஆற வைத்து விடவும். பின்பு வெந்துள்ள உளுந்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். நாம் அரைத்து வைத்த உளுந்து மாவை மீண்டும் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
மேலும் படிக்க : என்றும் இளமையாக.. ஹெல்தியாக இருக்கணுமா?

அதில் ஒரு கப் அளவு நாட்டு சர்க்கரை (சுவைக்கு தகுந்தார் போல் தேவையான அளவு) சேர்த்து நன்றாக கலக்கி விடவும். உளுந்து பால் கொதிக்க ஆரம்பிக்கும் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் கட்டி சேர்ந்து விடும். நன்கு கொதித்த பின்பு ஒரு கப் அளவு பசும்பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து கலக்கி விடவும் பின்பு உளுந்து பாலில் நறுக்கி வைத்த பாதாம் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை சிறிது நெய் விட்டு வறுத்து அதனை சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பாரம்பரிய உளுந்து பால் ரெடி இதனை நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது மிக விரும்பி குடிப்பர்.
மேலும் படிக்க : புதுசா ஒன்னு, கோதுமை மாவில் ரோல்..யாரும் பண்ணாத டேஸ்டி ரெசிபி

உளுந்து பால் தரும் உலக லெவல் நன்மைகள்
💥 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது
💥 எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையின் போது ஏற்படும் இடுப்பு வலியை குணமாக்க உதவும்.
💥 நரம்பு மண்டலம் வலு பெற்று சீராக செயல்பட உதவும்.
💥 மலச்சிக்கல் வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஆகியவை நீங்கும்.
Image credit : Google search