Jallikattu bulls

தேனாய் தித்திக்கும் சுவையான தேங்காய் பர்பி

இனிப்பு என்றாலே அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகத் தான் இருக்கும் .. குழந்தைகள் எல்லாம் வீட்டில் ஸ்வீட் செய்தால் அவ்விடத்தை விட்டு நகரவே மாட்டார்கள் ..அப்படி வீட்டில் அனைவராலும் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபியை தான் இப்போது பார்க்கலாம்

ஆமாங்க …நம்ம 80’s மற்றும் 90’s kids என்று அந்தக்காலம் முதல் நம்ம 2K kids வரை எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடும் ஸ்வீட் என்றாலே அது தேங்காய் பர்பி தான் ..நம்ம ஊரு மளிகைக்கடை ,பெட்டிக்கடை , நம்ம தாத்தா கடை என்று சொல்ல கூடிய அனைத்து கடைகளிலும் முன்னாடி எப்பவுமே தேங்காய் பர்பி இருக்கும்..

நம்ம எல்லாருமக்கும் கடைக்கு போன உடனே அந்த கடைகார தாத்தா கிட்ட திட்டு வாங்கிட்டு அவரு எடுத்து தரக்கு முன்னாடியே நாம டப்பாவ திறந்து தேங்காய் பர்பி சாப்பிட்ட அனுபவம் எல்லாமே இருக்கும்..அடுத்து வீட்ல செஞ்சா பர்பி சூடு ஆறுவதற்கு முன்பே அதை தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கும் ..அப்படி எல்லா காலமும் அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய் பர்பி ரொம்ப சூப்பரா சுவையா எப்டி செய்யலாம் என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் ஒரு கப்

நெய் 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை முக்கால் கப்

தண்ணீர் 50ml

ஏலக்காய்த்தூள் கால் ஸ்பூன்

பால் 2 ஸ்பூன்.

தேங்காய் பர்பி செய்முறை

முதலில் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ளவும்.தேங்காயை நீங்கள் திரும்பினாலும் சரி அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டாலும் சரி.. பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் துருவிய தேங்காயை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் .தேங்காய் அதிக நேரம் வதக்கி விட்டால் அதன் மனம் மாறிவிடும். எனவே லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து அதில் 50 ml தண்ணீரை ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும் கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.சர்க்கரை பாகில் உள்ள அழுக்குகளை நீக்க 2 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றினால் கசடுகள் மேலே நுரையாக வரும் அதனை ஒரு வடிகட்டி வைத்து வடித்து கசடுகளை எடுத்துவிடலாம் .

அதில் நாம் வறுத்து எடுத்து வைத்த தேங்காய்த் துருவலைப் போட்டு அதில் ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். பின்பு அதனை ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி ஊற்றி ஆற வைக்கவேண்டும் நன்றாக ஆறியபின் நீங்கள் நினைத்த வடிவத்தில் வெட்டி எடுக்க சுவையான தித்திக்கும் தேங்காய் பர்பி ரெடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *