ஒரே ஒரு லட்டில்..அனைத்து தீர்வுகளும்
இன்னைக்கு இருக்க வாழ்க்கைமுறையில் எல்லாரும் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதே பெரிய விஷயமா இருக்கு அதுல சத்தான உணவு தேடி எங்க சாப்பிட போறோம்.. அப்படி சத்தான உணவு சாப்பிடனும் நினைப்பவர்களுக்கும் இப்ப நேரம் கை கொடுக்கிறது இல்லை.
அப்படி ரொம்ப கம்மியான நேரத்துல ரொம்ப ரொம்ப சத்தான ஒரு உணவு கிடைச்சா எப்படி இருக்கும் ???இன்னைக்கு நம்ம சிலேட்டுகுச்சி பக்கத்துல எல்லாருமே ஈசியா சமைக்கக் கூடிய ஒரு ரெசிபியை பார்க்கலாம்.
Dry Fruit Laddu
தேவையான பொருட்கள்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பாதாம் – 100 கிராம்
உலர் திராட்சை – 100 கிராம்
பேரிச்சம்பழம் – 200 கிராம்
ஏலக்காய் பவுடர் – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பிஸ்தா நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரியை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் உலர் திராட்சையை போட்டு வறுத்து எடுத்துவிட்டு மீண்டும் அதே கடாயில் பேரீச்சம்பழங்களை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். வறுத்த பேரீச்சம்பழத்தை சிறிது நேரம் வரை ஆற வைத்து பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்..
அரைத்து வைத்த பேரிச்சம்பழத்தில் முன்பு நாம் வறுத்து வைத்த பாதாம், முந்திரி ,பிஸ்தா ,உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசையும்போது ஒரு அரை டீஸ்பூன் அளவு ஏலக்காய் பொடியை சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்பு கைகளில் சிறிது நெய்யை தேய்த்துக்கொண்டு பிசைந்து வைத்த மாவை லட்டு அளவில் உருட்டி கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான லட்டு ரெடி…
இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விரும்பி உண்ணக் கூடியதாக இருக்கும். இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதனை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம் அல்லது வெளியில் வைக்கும் பொழுது 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்…