ருசியால் கிறங்க வைக்கும் கேரட் சாதம்
நாம் உயிர் வாழ ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ அதேபோல உடலின் ஆரோக்கியமும். நம் உடலில் விட்டமின் சத்துக்கள் சரியான முறையில் இருந்தாலே நமக்கு எந்த நோய் பாதிப்பும் ஏற்படாது .ஒரு நோய் நமக்கு வருகிறது என்றால் ஏதாவது ஒரு வைட்டமின் குறைபாடு நம் உடலில் உள்ளது என்று அர்த்தம். இவ்வுலகின் அழகு ரசிக்க நமக்கு உதவுவது நமது கரு விழிகளே… கண்கள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு இன்றியமையாதவை என்று அனைவரும் அறிந்ததே.. அந்த கண்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு உதவியாக இருப்பது விட்டமின் ஏ.
நம் உடலில் விட்டமின் ஏ சத்து குறைவாக இருந்தால் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. இவ்வாறு நம் உடலுக்கு மிக மிக அவசியமான விட்டமின் சத்தை கொடுக்கும் ஒரு உணவாக கேரட் உள்ளது. கேரட் நம் உணவில் எடுத்துக் கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது. கண் சம்பந்தமான நோய்கள் வரவே வராது.முகப்பொலிவு ஏற்படும். இவ்வளவு நன்மைகள் வாய்ந்த கேரட்டை ஒரு ருசியான ரெசிபியாக எடுத்துக் கொண்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். ஆம் பின்வரும் சமையல் குறிப்பில் உங்களுக்கு பிடித்த வகையில் எளிதான முறையில் ஒரு ஆரோக்கியமான கேரட் சாதம் செய்யும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் – 1/2 கிலோ
முந்திரி – 10
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
தேங்காய் சிறிதளவு
இஞ்சி – ஒரு துண்டு
நெய் – 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 3 டீஸ்பூன்
கிராம்பு, ஸ்டார் பூ , பட்டை , பிரியாணி இலை ஆகியவை – 1
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன்
கேரட் சாதம் செய்யும் முறை
முதலில் ஒரு வாணலியை எடுத்துக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும் .பின்பு அதனுடன் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்டார் பூ பட்டை கிராம்பு பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் முந்திரி 10 அல்லது 15 சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.பின்பு இரண்டு பெரிய வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கிய வைத்ததை சேர்த்து நன்றாக வதக்கவும். மேலும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் , துண்டு துண்டாக நறுக்கி இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு அதில் நாம் நறுக்கி வைத்த கேரட்டை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் மேலும் அதில் துருவி வைத்த தேங்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். வதக்கிய கேரட்டில் சாப்பாட்டை சேர்த்து கிளறிவிட்டு கடைசியில் பொடி பொடியாக நறுக்கிய மல்லி இலையை மேலோட்டமாக தூவி விட்டு இறக்கி விடவும் அவ்வளவுதான் சூடான சுவையான கேரட் சாதம் ரெடி இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமாகவும் நாவிற்கு ருசியாகவும் அமையும்.