நாவை நாட்டியமாட வைக்கும் சூப்பரான தவா சிக்கன்..
சிக்கன் என்று சொன்னாலே நாக்கில் ருசி தாண்டவம் ஆடும் சிக்கனில் நிறைய வெரைட்டிகள் உள்ளது. சிக்கன் பிரியாணி சிக்கன் வறுவல் சில்லி சிக்கன் மஞ்சூரியன் பெப்பர் சிக்கன் என பல வகைகள் உண்டு நிறைய பேர் நான்வெஜ் மட்டன் மீன் ஆகியவற்றை சாப்பிட மாட்டார்கள் ஆனால் நான்வெஜிலேயே அனைவரும் விரும்பும் டிஷ் ஆக உள்ளது சிக்கன் மட்டுமே.. சிக்கன் வெறியர்களுக்கு எளிதில் ஒரு செம்மையான ருசியான ஒரு சிக்கன் ரெசிபி தயார் செய்யலாம் என்றால் எவ்வாறு இருக்கும். நாம் இப்போது பார்க்க போகும் ரெசிபி மிக எளிதாக செய்யக்கூடியதாகும். வாருங்கள் அந்த சூப்பரான ரெசிபி என்னவென்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 1/2 பழம்
தவா சிக்கன் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கிலோ சிக்கனை எடுத்து நன்றாக கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதில் சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு மற்றும் அரை எலுமிச்சை பழம் பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும் பின்பு அதனை ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அந்த சிக்கனில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் மல்லித்தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக செய்யவும் மேலும் அதில் தயிர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும் மேலும் உப்பு உங்களுக்கு தேவையான அளவு பார்த்து போட்டுக் கொள்ளுங்கள் . மேலும் இதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.இந்த கலவையை நன்றாக கலந்த பின்பு ஒரு அரை மணி நேரம் மூடி நன்றாக ஊற வைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து நாம் உறவைத்த சிக்கனை எடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும் இரண்டு புறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி திருப்பி போட்டு வறுத்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான நாவிற்கு ருசியூட்டும் தவா சிக்கன் ரெடி. நீங்கள் இதனை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது உணவுடன் வைத்தும் சாப்பிடலாம் மாலை வேளையில் இவ்வாறு செய்து சாப்பிட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர்.