உடல் சூடு தணிய வெந்தயக் களி
வெந்தயக்களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை தரக்கூடியது. தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது. உணவில் அடிக்கடி அல்லது தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது. வாரம் ஒரு முறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது வெந்தயக்களி செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.
- வெந்தயம் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை தரக்கூடியது.
- தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது.
- பூப்பெய்த பெண்களுக்கு இந்தக் களியை செய்து கொடுப்பதால் வயிற்று வலி குறையும்.
வெந்தயக் களி
தேவையான பொருட்கள்
பச்சரிசி 100 கிராம், வெந்தயம் 25 கிராம், உளுந்து இரண்டு ஸ்பூன், கருப்பட்டி 100 கிராம், தண்ணீர், உப்பு, நல்லெண்ணைய் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக கழுவி ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்து வைக்கவும். ஒரு பங்கு அரைத்த மாவில் நான்கு பங்கு தண்ணீர் கலக்கவும். மூன்று சிட்டிகை உப்பு கலந்து தண்ணியாக மாவை கலக்கி அடுப்பில் வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கைவிடாமல் கிளற வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்துக் கொள்ளும். கையை தண்ணீரில் நனைத்து தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது. களியை தொட்டால் கையில் ஒட்டக் கூடாது. கையில் ஒட்டாமல் வந்தால் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம்.
தண்ணீர் பத்தாத பட்சத்தில் சிறிது தெளித்துக் கொண்டே கிளற வேண்டும். முதல் முறையாக செய்பவர்களுக்கு இந்த அளவில் செய்து பழகிய பிறகு இதன் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.
இன்னொரு கடாயில் கருப்பட்டியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி, வடிகட்டிய தண்ணியை திரும்பவும் அடுப்பில் வைத்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். கருப்பட்டி பாகு தயாராகி விடும்.
களி வெந்த பிறகு இறக்கி ஒரு தட்டில் வைத்து குழி பறித்து, கருப்பட்டி பாகு ஊற்றி, நல்லெண்ணைய் கலந்து சூடாகப் பரிமாறவும். ஆறிவிட்டால் சாப்பிடுவதற்கு சுவைக் குறைவாக தெரியும். சூடாக பரிமாறி சாப்பிடவும்.