சமையல் குறிப்புவாழ்க்கை முறை

காய்கறி கட்லெட்..!!

குழந்தைகள் காய்கறியை சரியாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் கொடுக்கும் போது அடம்பிடிப்பார்கள். குழந்தைகளுக்கு அடிக்கடி காய்கறி கட்லெட் செய்து கொடுக்கலாம்.

காய்கறி கட்லெட்

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு கால் கிலோ, பச்சை பட்டாணி ஒரு கப், கேரட் 3, காலிபிளவர், பீன்ஸ் 50 கிராம், பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 5, மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் பொடி அரை ஸ்பூன், பிரெட் தூள் 2 கப், மைதா ஒரு கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பட்டாணி, துருவிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், கழுவி அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிந்த காய்கறிகளுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துப் பிசைந்து எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து, பின்பு பிசைந்து வைத்த காய்களை நன்றாக சிவக்க வதக்கி கொள்ளவும். உருளைக் கிழங்கையும் சேர்த்து வதக்க வேண்டும். இதில் கொத்தமல்லி தழையை தூவவும். உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

மைதா மாவை உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி உருண்டையை தட்டையாக தட்டி பிறகு அதில் மைதா மாவில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் பிரட்டி அதன் மேல் இரு பக்கங்களிலும் எண்ணையை விட்டு நன்றாக வேக விடவும்.

இருபக்கமும் சுட்டெடுத்தால் காய்கறி கட்லெட் தயார். அதிக டேஸ்டியான, ஆரோக்கியமான, இந்த காய்கறி கட்லெட் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *