வெஜ் மசாலா மேகி
மேகி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. டாக்டர்களின் கருத்து என்னவென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி இவற்றை கொடுக்கக் கூடாது என்பது தான். ஆனாலும் இன்றைய குழந்தைகள் பாஸ்ட் ஃபுட் அடிமையாக உள்ளனர்.
- மேகி சமைக்கும் போது இதில் சத்தான காய்கறிகளையும் சேர்த்து சமைத்து கொடுப்பதால் ஆரோக்கியமாக மாற வாய்ப்புள்ளது.
- உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.
எக்லெஸ் வெஜ் மசாலா மேகி
தேவையான பொருட்கள்
ஒரு கப் மேகி வேக வைத்து எடுத்து வைக்கவும். கால் கப் அரிந்த வெங்காயம், அரிந்த தக்காளி கால் கப், பேபிகார்ன். பட்டாணி, கேரட், பீன்ஸ், கேப்ஸிகம், உருளைக்கிழங்கு கழுவி சன்னமாக சீவி வைத்துக் கொள்ளவும்.
டொமட்டோ சாஸ் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், கரம் மசாலா அரை ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் அரை ஸ்பூன், உப்பு தேவையான அளவு. தண்ணீர் 100 மில்லி. எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி கருவேப்பிலை தாளித்து கழுவி சீவிய காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வேக விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பிறகு வேக வைத்து எடுத்து வைத்த மேகி சேர்த்து மெதுவாக கிளறி கடைசியாக மிளகு தூள், டொமட்டோ சாஸ் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறலாம். வெஜ் மேகி தயார்.