சினிமாசினிமா பாடல்கள்

வீராப்பு படம் பாடல் வரிகள் புலியைக் கிளி ஜெயிச்சா காதல்…

வீராப்பு இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் சுந்தர். சி கோபிகா சந்தானம் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் டி. இமான்

பெ: ஹாஹ ஹாஹ ஹா ஆ ஆ….
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
   புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
பெ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
    புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
   எழுந்திட மனசு இருக்குமா
   எழுந்தாலும் மனசு இருக்குமா
பெ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
ஆ:  நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

சரணம்-1
=======

பெ: காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
    தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை
ஆ: உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும் இரு கண்களில்
   காட்டிக் கொடுக்கிறதே
   உனக்கும் எனக்கும் முன்னாலே நம் நிழல்கள்
   ஒன்றாய் நடக்கிறதே
பெ: ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
   காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
   புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

மேலும் படிக்க : பட்டுச்சா பட்டுச்சா என்னோட….

சரணம்-2
=======

பெ: ஆ ஹாஅ ஆ ஹா…
    நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
    மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும் ஆ ஆ ஆ
ஆ: ஓ உன்னைக் காணும் முன்னாலே அடி என்னை
    நானே வெறுத்து வந்தேன்
    உன்னைக் கண்ட பின்னாலே நான் புல்லையும்
    பூண்டையும் நேசிக்கிறேன்
பெ: ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
   உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
பெ:ஆ புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
   எழுந்திட மனசு இருக்குமா
பெ: எழுந்தாலும் மனசு இருக்குமா
ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
   ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ…
   நான் உன்னைப் பார்க்கிறேன்

மேலும் படிக்க : முரளிதரனின் 800 படத்தில் நடிக்கும் விஜய சேதுபதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *