வீட்டிற்கு உண்டான வாஸ்து..!!
வீடு என்றாலே சில பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். அதை எப்படி நாம் சரி செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டும். அப்படி ஆகிவிட்டது, இது இப்படி ஆகிவிட்டது என்று புலம்புவதை முதலில் நிறுத்த வேண்டும். வாஸ்துவை நம்புகிறவர்கள் மட்டுமே இதை இப்படி செய்தால் சரியாகும் என்று யோசிக்கலாம்.
வாஸ்துவில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த பதிவை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் வீடு கட்டுபவர்கள் அனைவரும் அந்த வீட்டிற்கு உண்டான வாஸ்து பார்த்து தான் கட்டியிருப்பார்கள். நாம் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு போகிறோம் என்றால் தைரியமாகச் சொல்லலாம்.
காஸ்மிக் எனர்ஜி
கடவுள் துணை என்று இருக்க வேண்டும்.வாஸ்துவில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது பொருந்தும். பாதி நம்பிக்கை இருக்கிறது, பாதி நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த பதிவு உறுதுணையாக இருக்கும். ஒரு வீட்டிற்கு காஸ்மிக் எனர்ஜி நிறைந்திருக்க வேண்டும். நல்ல அதிர்வலைகள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
பஞ்சபூத தலைவரான சிவபெருமானை
சிலர் தன் வீட்டில் நல்ல அதிர்வலைகள் வர வேண்டும் என்பதற்காக நிறைய பொருட்களை வாங்கி வைப்பார்கள். ஒரு சில பொருட்கள் வைப்பதால் வீட்டில் பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என்று கூறுவார்கள். இப்படி ஒரு பொருளை வாங்கி வைப்பதால் பாசிட்டிவ் எனர்ஜி வரும் என்று நம்புகிறேன். நாம் நம்மை படைத்த இறைவனை ஏன் நம்புவதில்லை.
பஞ்சபூதங்கள் நிறைந்த வாஸ்து ஒரு வீட்டில் குறைபாடு இருக்கிறது. என்றாலும் பஞ்சபூத தலைவரான சிவபெருமானை நாம் வழிபடலாம். பஞ்சபூத வாஸ்துவில் ஏதாவது ஒரு குறையிருந்தாலும் பஞ்சபூதங்களுக்கு தலைவனான சில கோவில்கள் சிறப்பு வாய்ந்த ஸ்தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு சென்று வருவதால் இந்த வாஸ்து குறைபாடு நீங்கும்.
பஞ்சபூத ஸ்தலங்கள்
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருக்காளஹஸ்தி, சிதம்பரம் இது முக்கிய ஸ்தலங்கள் பஞ்சபூத அடிப்படையில் உள்ள இந்த ஸ்தலங்கள் சென்று வரலாம். ஒரு சில ஊர்களில் இந்த ஸ்தலங்களுக்கு உரிய முக்கிய தலங்களும் உள்ளது.
சென்னை, மதுரை போன்ற இடங்களில் உள்ளது. அங்கேயும் சென்று வரலாம். இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் எவரோ அவர்கள் தான் செய்ய வேண்டும். இதனால் இந்த வாஸ்து குறைபாடு போக்க முடியும். தொடர்ந்து நாளைய பதிவில் பார்ப்போம்.