மாத்தி யோசிங்க.. இத இப்படி செய்ங்க..!!
தினமும் ஒவ்வொரு குழம்பு வைத்து சலித்து விட்டதா? வித விதமான சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி இன்று பார்க்கலாம். புடலங்காய் சாம்பார், இட்லி சாம்பார் எப்படி வைப்பது இந்த பதிவில் பார்க்கலாம். சாம்பாரில் பல வகைகள் இருந்தாலும் சாம்பாரின் சுவை மாறுபடும். இந்த சாம்பார் எப்படி வைப்பது வாங்க பார்க்கலாம்.
இட்லி சாம்பார்
தேவையானவை : துவரம் பருப்பு 150 கிராம், தக்காளி, கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, தலா 1. பீன்ஸ் 5, புளி எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள், சீரகம் தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் 10, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு எண்ணெய் தேவையான அளவு.
தாளிக்க : கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சோம்பு தலா ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
வறுத்து அரைக்க : கடலைப்பருப்பு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மிளகு தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், தனியா ரெண்டு ஸ்பூன், காய்ந்த மிளகாய் 8 இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்து கொள்ளவும்.
செய்முறை : துவரம்பருப்பை மஞ்சள்தூள் சீரகம் பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். காய்களை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து, வெந்த காய்களில் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வெந்ததும் பருப்பு, வறுத்து அரைத்த பொடியை, தண்ணீரில் கலந்து சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சூடான இட்லி சாம்பார் தயார்.
புடலங்காய் சாம்பார்
தேவையானவை : துவரம் பருப்பு 100 கிராம், சிறிய புடலங்காய் தோல் சீவி கட் செய்தது, தக்காளி, வெங்காயம் நறுக்கியது, தலா ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன், சீரகம், பச்சை மிளகாய் 2 கீறி வைக்கவும், தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி இரண்டு டீஸ்பூன், புளித் தண்ணீர் அரை டம்ளர், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க : கடுகு வெந்தயம் தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை : துவரம் பருப்பை, மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள், சேர்த்து வேகவிடவும். புடலங்காய் வட்டமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், புடலங்காய், தக்காளி, சேர்த்து வதக்கி வேக விடவும். சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றுடன், புளி கரைத்த தண்ணீர் சேர்த்து கொதித்ததும், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சூடான புடலங்காய் சாம்பார் தயார்.