கிரன்ச்சி சாக்கோ சிப்ஸ் வெண்ணிலா குக்கீஸ்
குக்கீஸ் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதுவும் வாயில் போட்டாலே கரையக் கூடிய தன்மையைக் கொண்ட அருமையான குக்கீஸ் இந்த சாக்கோ சிப் குக்கீஸ்.
தாமதிக்காமல் இதை நீங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். குழந்தைகள் வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்தக் குக்கீஸ் கிரன்ச்சியாக மட்டுமில்லாமல் மிருதுவாக இருக்கும். இந்த குக்கீஸ் எப்படி தயாரிக்க வேண்டும் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
சாக்கோ சிப்ஸ் வெண்ணிலா குக்கீஸ்
தேவையான பொருட்கள் : 100 கிராம் மைதா மாவு, அரை கப் சர்க்கரைத் தூள், உருக்கிய பட்டர் 2 ஸ்பூன், சாக்லேட் 2 ஸ்பூன், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் தலா அரை ஸ்பூன், பால் ஒரு ஸ்பூன், வெனிலா எசன்ஸ் கால் ஸ்பூன்.
செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இந்த கலவையில் மைதா சேர்த்து நன்றாக கலக்கி, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்த்து கைவிடாமல் மாவு போல் நன்றாக மிருதுவான பதத்தில் இருக்கும் படி கிளறி வைக்கவும்.
இந்த மாவை சப்பாத்தி பதத்தில் உருட்டி சப்பாத்தியாக தேய்த்து குக்கீஸ் விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஓவன் 10 நிமிடம் சூடு செய்து விட்டு மைக்ரோவேவ் ட்ரேயில் அடுக்கி வைத்த குக்கீஸ் ஓவனில் வைத்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு கடையில் வாங்கி கொடுக்கும் குக்கீஸ் விட இதை வீட்டில் செய்து கொடுக்கலாம். டீ, காபி குடிக்கும் போது இந்த குக்கீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
கடையில் வாங்கி கொடுப்பதை விட வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த குக்கீஸ் ஓவனில் மட்டுமே செய்ய முடியும்.