நாம் திட்டி தீர்க்கும் லாரி டிரைவர்கள் வாழ்வு எவ்வளவு கடினம் தெரியுமா?
லாரி டிரைவர்:
லாரி என்றாலே நம்மில் பலருக்கு பிடிக்காமல் போய்விட்டது அது ஏனென்றால் அது ஒரு உளவியல் ரீதியான பிரச்சனை என்று கூறுகிறார்கள் துறைசார் வல்லுனர்கள் சினிமாக்களிலும், செய்தித்தாள்களிலும், நம் அன்றாட வாழ்க்கையிலும் லாரியை ஒரு அச்சுறுத்தும் வாகனம் ஆகவே நாம் கண்டு வருகிறோம்.
இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், விபத்து ஏற்பட்டாலும் ” இந்த லாரி காரநுங்களே இப்படி தான், அவனுங்க தான் காரணம்..! “
என்று வசை பாட ஆரம்பித்து விடுகிறோம்.
ஆனால் ஒரு லாரி டிரைவர் மற்றும் கிளீனர் படும்பாடு இருக்கிறதே அதை எளிதாக சொல்லிவிட முடியாது.
லாரிகளில் சரக்கு போக்குவரத்து:
லாரி போக்குவரத்து நடைபெறவில்லை என்றால் நாம் அன்றாடம் வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் கால்குலேட்டர் என்று எதுவுமே நமக்கு சரியான நேரத்தில் கிடைக்காது தீப்பெட்டி முதல் டிஜிட்டல் விஷயங்கள் வரை நாம் லாரிகளை தான் நம்பி இருக்கிறோம்.
அதுவும் அவர்களுக்கு வேலை என்பது மிகவும் சவாலானது நித்தமும் கத்தி மேல் நடப்பது போன்று அவர்கள் வாழ்க்கை அமைந்து விடுகிறது.
சில மாதங்களுக்கு முன்னால் காஷ்மீரில் நமது தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுனர்கள் ஆப்பிள் லோடு எடுத்துவரச் சென்று அங்கேயே மாட்டிக் கொண்டார்கள் இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
கிட்டத்தட்ட அந்த பனிச்சறுக்கல் சாலை பிரச்சனை காரணமாக அங்கேயே 30 நாட்களுக்கு மேலே தங்கியிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நமது தமிழகம் திரும்பினார்கள்.
டூவீலர் அல்லது சிறிய காரியம் வைத்துக்கொண்டு நாம் தெருக்களிலே திரும்ப படா தபாடு படுகிறோம் ஆனால் அவர்களைப் பொருத்தவரை 14 வயது 32 வீலர் கன்டைனர் டபுள் கண்டனர் என்று எக்கச்சக்கமான கனரக வாகனங்கள் இருக்கிறது அதை லாவகமாக கொண்டு செல்ல வேண்டும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் வாழ்வு அப்படியே முடிந்து விடும்.
அவர்களுக்கு வழி நெடுக ஏற்படும் பிரச்சனைகள் பல லாரி ஏதோ பஞ்சர் ஆகி விட்டால் அவர்களுக்கு மாற்ற தெரிந்திருக்கவேண்டும் துணியை எடுத்து இல்லை என்றால் அவர்களால் மேலும் பயணம் செய்ய முடியாது இது தவிரவும் சாலை கொள்ளையர்கள் பலர் பெருகிவிட்டார்கள் அவர்களுக்கு அது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது பொருட்களுக்கு ஆசைப்பட்டு லாரி டிரைவர் மற்றும் கிளீனரை அடித்து நொறுக்குகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் அவர்களின் பயணம் பெரும் சவாலாக இருக்கிறது.
அவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தெரிந்தவர்கள் வாழ்வில் எந்தவித சந்தர்ப்பத்தையும் எளிதாக ஏற்றுக் கொள்பவர்களாக தேடுகிறார்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர்களுக்கு தெரியாத பாடிய இருக்காது கூகுள் மேப் தோற்றுப்போகும் அளவுக்கு எளிதான வழி தடங்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
லாரி ஓட்டுனரின் கோரிக்கை:
லாரி ஓட்டுனர்கள் பொதுவாக வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு உபகரணங்கள் மிக அதிகரித்து விட்டது ஆனால் எந்த நேரமும் மரணம் என்று இருக்கும் எங்களைப்போன்ற லாரி ஓட்டுநர்களின் வாகனத்திற்கு இன்னும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படவில்லை இதை தயாரிப்பு நிறுவனங்கள் கருத்தில் கொண்டு செயல்பட்டால் மிகவும் புண்ணியமாக போகும் என்று கூறுகிறார்கள்.
லாரி ஓட்டுனர்கள் பல்கலை வித்தகர்களில் தான் அவர்கள் வெறும் அடுப்பு வெங்காயம் கோதுமை மாவை வைத்துக்கொண்டு பல்வேறு விதமான டிஸ்கஸ் செய்து விடுவார்கள் அவர்களை நம்பி இல்லாமல் அவர்களே கிடைக்கும் பொருட்களை வாங்கி சமைத்து மற்றவர்களுக்கும் பரிமாறி அசத்தி விடுவார்கள் இதில் குறிப்பாக வட இந்தியா மற்றும் பஞ்சாப் சென்ற லாரி ஓட்டுநர்கள் இந்த சமையல் கலையிலும் வல்லுனர்களாக இருக்கிறார்கள்.
அவர்களைப் போன்றவர்கள் ஆரம்பித்ததுதான் இந்த டாஸ்மாக் கடைகள் இன்று இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது.
லாரி ஓட்டுநர்களின் சிரமத்தை காட்டு மயில் தமிழ் சினிமாவில் மிக கம்மியான படங்கள் தான் வந்திருக்கிறது என்று ஒரு படம் வந்ததாக ஞாபகம் அதை தவிர்த்து அவர்களை மோசமானவர்களாக தான் சித்தரித்து வருகிறார்கள் இதுவும் அவர்களை ஒரு மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
இனிமேலாவது அவர்களின் கஷ்டம் புரிந்து கொண்டு அவர்களின் சக மனிதர்களாக மதிப்போம் எல்லா வேளையிலும் ஒரு சிக்கல் இருக்கிறது ஆனால் லாரி ஓட்டுனர்கள் சந்திக்கும் சிக்கல் நம் வாழ்வில் சந்திக்கும் சிக்கலை விட மிகப் பெரியது.