ஆரோக்கியம்குழந்தைகள் நலன்சமையல் குறிப்புமருத்துவம்

வல்லாரைக் கீரை சட்னி

படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரைக் கீரை மிகவும் நல்லது. ஞாபக சக்தி பெருகும். சூடான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி ஆக இருக்கும். இந்த சட்டினி சாப்பிடும் போது கொத்தமல்லி சட்னி போன்று கலர் இருக்கும். வல்லாரைக் கீரையை எங்கு பார்த்தாலும் விட வேண்டாம். ஒரு சில கீரை எப்படி சமைப்பது என்று தெரியாமலே அதை ஒதுக்கி விடுகிறோம்.

  • வல்லாரைக் கீரை அருமையாக இருக்கும்.
  • சூடான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி.
  • வித்தியாசம் ஒன்றும் தெரியாது.

வல்லாரைக் கீரை சட்னி

தேவையான பொருட்கள்

ஒரு கட்டு வல்லாரைக் கீரையை நுனியில் உள்ள இலைகளை மட்டும் எடுத்து கழுவி ஆய்ந்து வைக்கவும். சிறிய வெங்காயம் 6, வர மிளகாய் 6, புளி சிறிது, தக்காளி மூன்று, பூண்டு 3, தேங்காய் அரை மூடி துருவியது. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பை தாளித்து சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி, வரமிளகாய், தேங்காய், வல்லாரைக் கீரை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற வைத்து அரைத்து எடுத்தால் வல்லாரைக் கீரை சட்னி தயார்.

இந்த வல்லாரை சட்னி தோசைக்கு அருமையாக இருக்கும். கொத்தமல்லி சட்னி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ? அதே போன்று தான் இருக்கும். வல்லாரை கீரை சேர்த்து சமைப்பதால் வித்தியாசம் ஒன்றும் தெரியாது. எனவே பயப்படாமல் இந்த வல்லாரை கீரையை எங்கு பார்த்தாலும் கிடைக்கும் போது வாங்கி சமைத்துக் கொடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *