சினிமா

தல அஜித் ஊரடங்கில் செய்த செயலைப் பாருங்கள்

நீங்கள் தல ரசிகரா! வலிமை படத்திற்காக காத்திருக்கிறீர்கள்! இயற்கை விரும்பியா! யாராக இருந்தாலும் இந்தப் பதிவை படித்து கருத்துக்களை கூறலாம்.

வலிமை படத்தைப் பற்றி ஆவலாக எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு அஜித் குமார் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?

சினிமாவில் நடிப்பதை தவிர்த்து ரேஸிங் போட்டோகிராஃபி மற்றும் ஏரோ மாடலிங் என பன்முக வல்லவராக இருக்கும் அஜித் குமார் தற்போது கார்டனிங்கில் இறங்கியுள்ளார்.

கொரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கில் ஒவ்வொருவரின் ஆழ்மனது தட்டி எழுப்பப்பட்டு அவரவர் விருப்பு வெறுப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது என்றே கூறலாம் போலிருக்கிறது.

அஜித் குமார் தன் வீட்டின் பின் புறத்தில் இருக்கும் வெற்றிடத்தை பூந்தோட்டமாக மாற்றியுள்ளார். தன்னந்தனியே யாருடைய உதவியும் இல்லாமல் பலநேரம் இதற்காகவே செலவிட்டு 75 வகையான பூக்கள் மற்றும் மருத்துவ குணமிக்க செடிகளை வளர்த்து வருகிறார்.

என்னை அறிந்தால் படத்தில் தனித்தனியாக தன் மகளுக்கு அனைத்து வகையான உதவியும் செய்யும் தல அஜித்; படத்திற்கு மட்டுமல்ல நிஜ வாழ்விலும் அனைத்து விதமான வேலைகளையும் செய்யக்கூடியவர் என்று நிரூபித்து வருகிறார்.

ஊரடங்கு முடிவுக்காக காத்திருக்கும் பல மனிதர்களில் இவரும் ஒருவர். ஊரடங்கு என்று சொல்வதைவிட கொரோனாவின் கொட்டம் அடங்கி சக வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக பலர் காத்திருக்கின்றனர். அப்படி ஒரு சுதந்திர நிலை நிலவும் பொழுது அனைவருக்குமே கொண்டாட்டம்.

எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் எடுக்கப்பட்டு வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியபின் துவங்கும் பொழுது தல அஜீத்தை களத்தில் காணலாம். துவங்கிவிட்டால் அதி வேகமாக படப்பிடிப்பு நடத்தி கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

கிரீன் இந்தியா சேலஞ்சு என்ற ஹேஷ்டேக்கில் பலர் பலவிதமான பசுமை பணியை செம்மையாக நடத்தி சமூக வலைத்தளங்களில் பகிரும் நிலையில் இருக்க எந்த வித சத்தமும் இல்லாமல் தன் வீட்டின் பின் பூந்தோட்டத்தை உருவாக்கியுள்ளார் தல அஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *