போலியோ சொட்டு மருந்து போடப்படும் தேதிகள் அறிவிப்பு
ஒவ்வொரு வருடமும் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்துகள் 5 வயதிற்குள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் ஜனவரி 17ல் இருந்து 19 ஆம் தேதி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை தொடங்கி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மற்றும் பள்ளிகளிலும் சொட்டு மருந்துகள் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் நேரமாக இந்த மையங்கள் பொதுவாக செயல்படுகிறது.

மூன்று நாட்களுக்கு வழங்கப்படக் கூடிய இந்த சொட்டு மருந்து. போக்குவரத்து இல்லாத ஊர்களுக்கும் சென்று நடமாடும் குழுக்கள் மூலமாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் அக்கம்பக்கத்தினரிடம் உறவினர்கள் இத்தகவலை தெரிவித்து இந்த மூன்று நாட்களில் சொட்டு மருந்து போடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.