சினிமாசெய்திகள்தமிழகம்

தனுஷின் வாத்தி பட டீசர் என்ன இப்படி இருக்கு????

ஹாலிவுட் கோலிவுட் பாலிவுட் என பல மொழிகளில் நடித்து அசுர வேகத்தில் தனது திறமையின் மூலம் நடிப்பில் உயர்ந்த எல்லைக்கு சென்று கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ் இவரை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை இவர் நடித்த படங்கள் ஏராளம். இவர் தற்போது தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் 40 வயதிலேயே 400 வருடங்களுக்கு உண்டான சாதனையை இவர் படைத்து காட்டியுள்ளார் முதலில் இவர் படத்தில் நடிக்கும் பொழுது இவரின் தோற்றத்தை வைத்து பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர். என்ன நீ இப்படி இருந்துட்டு படத்துல ஹீரோவா வர நடிக்கிறியா அப்படின்னு கிண்டல் பண்ணவங்க ஏராளம் ஆனா அத்தனையும் தாண்டி அவங்களுக்கு வார்த்தையால பதில் சொல்லாமல் தன்னோட திறமையாளையும் முன்னேற்றத்தாலையும் இப்ப அவர் பதில் சொல்லிட்டு இருக்காரு…

தோற்றத்தை வைத்து ஒருவரை எப்பொழுதும் எடை போட்டு விடக்கூடாது மற்றவர்கள் நம்மளை கேலி செய்கிறார்கள் என்பதற்காக நாம் ஒன்றும் திறமையற்றவர்கள் என்றாகி விட மாட்டோம். அவர்கள் இடம் வார்த்தையால் பதில் கூறுவதால் எந்த ஒரு பயனும் இல்லை அவர்களின் வார்த்தையை நமது முன்னேற்றத்திற்காக வைத்துக்கொண்டு நம் திறமையால் வெளி காட்ட வேண்டும் என்பதற்கு தனுஷ் ஒரே எடுத்துக்காட்டாக மாறி வருகிறார். ரீசண்டாக இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்று செய்தி பரவி வந்தது. இப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது இது ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்திற்கு அழைத்து வருகின்றது. வார்த்தை திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாக உள்ளது. தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் திரைப்படம் கலக்கப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : அரண்மனை படம் பாடல் பெட்ரோமாக்ஸ் லைட்டே…

கல்வியை பிரசாதமா கொடுங்க 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விலை போட்டு விக்காதீர்கள் என்று தனுஷ் கூறும் ஒரு டயலாக் டீசரில் வெளியாகி உள்ளது இந்த டயலாக் தற்போது சூப்பர் ஹிட் ஆக மாறி உள்ளது. டீசரை இந்த லெவலுக்கு இருக்குனா படம் சும்மா செமையா இருக்குன்னு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். எங்கு சென்றாலும் வாத்தி படத்தின் டீசர் மட்டுமே உள்ளது . வாத்தி படத்தில் தனுஷ் கூறும் இந்த டயலாக் தான் தற்போது அனைத்து சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. மேலும் இவர் பல்வேறு வெற்றிகளுக்கு வைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க : எடைக்குறைப்பு கதாநாயகிகளின் பட்டியலில் அடுத்தது ஹன்சிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *