சினிமா

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தீர்க்கதரிசி சூர்யாவின் பர்த்டே இன்றைக்கும் விட்டு வைக்கல நெட்டிசன்கள். கல்லூரி தேர்வுகள் ரத்து என்ற செய்தி இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளி வந்ததால் மீம்ஸ் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் மூன்று நாட்களுக்கு முன்புதான் தனக்கென்று அக்கவுண்டை உருவாக்கியுள்ளார். 6 லட்சம் மக்கள் தற்போது வரை இவரை ஃபாலோ செய்கின்றனர். சூர்யா எப்ப வருவாருன்னு மக்கள் காத்துட்டு இருக்காறாப்போல தெரியுது. இன்றைக்கி அவரோட பர்த்டேவ முன்னிட்டு ஸ்கூல் யூனிபார்ம் மாரி ஒயிட் அண்ட் ஒயிட்டில் போஸ் கொடுத்து இருக்காரு சூர்யா. அதோட அனைவரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம் வெளியிட்டிருக்கிறாரு.

திரை உலகம்

சூரரைப்போற்று படக்குழுவினர் சூர்யாவோட பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நிமிட காணொளி பாடலை யூடியூப்ல வெளியிட்டாங்க. காட்டுப் பயலே பாடலை ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க பல ரசிகர்களுக்களோட கைப்பேசி ஒலியாய் இருக்கும்.

அந்தப் பாடலோட வியூஸ் கவுண்ட் ஜாஸ்தியாயிட்டே போட்டு இருக்கிற நிலைமைல அதுக்கு போட்டியா வாடிவாசல் படத்தோட அப்டேட்டும் வந்தது. சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர இயக்குனர் வெற்றிமாறன் தன்னோடு ட்விட்டர் அக்கவுண்ட்ல வெளியிட்டு இருக்காரு.

ஆக்ரோஷமான பார்வையோடு கம்பீரமாக நிற்கும் சூர்யா பின்னணியில் கல்வெட்டு மாதிரி வேலைசெய்யும் மக்களும் மாடும் பொறிக்கப்பட்டிருக்கு. மாடடுனு சொல்வதைவிட காளனு சொன்ன இன்னும் கரெக்டா இருக்கும். வாடிவாசல் படத்தோட பெயருக்கு ஏற்ற மாதிரி ஜல்லிக்கட்டை தளமா கொண்டு எடுக்கப்படும் படம். ஜல்லிக்கட்டு நடைபெறும் போது காளை களத்தில் இறங்குற அந்த நுழைவாயில் தாங்க வாடிவாசல்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்ட இந்த புகைப்படம் சூப்பரான பரிசுங்க.

1958 வாடிவாசல் நாவல் செல்லப்பா அவர்களால் எழுதப்பட்டது. அந்த நாவலோட உரிமத்தை இயக்குனர் வெற்றிமாறன் பெற்று இந்த படத்தை இயக்குறாரு. இதுக்கு முன்னாடி இதே மாதிரி பட்டியல்ல இருக்கிறது விசாரணை அசுரன். இந்த இரண்டு படமும் இதே மாதிரி நாவல் கதைய தளமா வைச்சு எடுக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள்.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் சூர்யாவைப் பற்றி ஒரு பேட்டில ரொம்ப பெருமையா பேசியிருந்தாரு. ‘ஒருமுறை சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வழியில கூட்ட நெரிசலில் மாட்டிக்கிட்டாராம். வண்டி எல்லாம் நின்றுபோன நிலமைல இருந்த அந்த சாலையில தன்னோட காரவிட்டு இறங்கி ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஸ்டூடியோவுக்கு ஓடியே 15 நிமிஷத்துல வந்துட்டாராம். அப்படி ஒரு சரியான நேரத்தை கடைப்பிடிக்கும் மனிதராம் சூர்யா.’

இப்படி சூர்யாவோட பிறந்தநாளான இன்றைக்கு பல பல விஷயங்கள் வந்துட்டே இருக்குங்க. அவர பத்தி தெரிஞ்சுக்கிட்டே அப்படியே வாழ்த்துக்களை போட்டுடுங்க மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *