உத்திரகாண்ட பனிவெள்ளம் களமிரங்கிய இந்திய இராணுவம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக பனிப்பாறைகள் உருகி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரையோர மக்கள் மாயமாகினர். மீட்புப்பணி நடவடிக்கையின் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையினர் களமிறங்கி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உத்திரகாண்ட் பெருவெள்ளம் இராணுவம் மீட்புபணியில்
சமோலியில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காணாமல் போனோரை தேடும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையினர் இராப்பகலாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.
பெருவெள்ளம் மக்கள் பீதியில்
சமோலி மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டது மேலும் பனிப் பாளங்கள் உருகின. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோர பகுதியில் சுமார் 170 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமாக இருக்கின்றனர். இவர்களை தேடும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டிருக்ன்கிறது.
விமானப்படையினர் தேடல் முகாம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் செம்மொழி மற்றும் ஜோஷிமத் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தங்கள் பணியை தொடங்கியிருக்கின்றனர். விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றது. திபெத் எல்லையில் ஏழு பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நிவாரண நிதி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உயிரிழந்தோருக்கு மாநில அரசின் சார்பாக நாலு லட்சம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் அறிவிக்க அரசு அறிவித்துள்ளது மேலும் பிரதமர் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்.