ஃபேசன்சமையல் குறிப்புமருத்துவம்

நீங்கள் உபயோகபடுத்தும் பாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

எவர் சில்வர் பாத்திரம் : இரண்டுமே இல்லாதவை

நன்மை அளிக்கும் சத்துகளோ, தீங்கு விளைவிக்கும் கூறுகளோ இரண்டுமே இல்லாதவை தான் இந்த எவர்சில்வர் பாத்திரங்கள். இதை, சாம்பல், சோப்பு எது வைத்தும் சுத்தம் செய்யலாம். எவர் சில்வர் பாத்திரம் சமைக்கும் பொது சீக்கிரம் சமையல் ரெடி ஆகி விடும். நேரம் மிச்சம் ஆகும். அடிபிடிக்கும் தன்மை கொண்டது. எளிதாக துரு பிடிக்கும், மேலும் பாத்திரம் விரிசல் விட்டாலும் இந்த பாத்திரத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

இரும்பு பாத்திரங்கள் : ரத்த சோகைக்கு தீர்வு

இரும்பு சாது கிடைப்பதால் ரத்த சோகைக்கு தீர்வு கிடைக்கும். இந்த பாத்திரத்தில் துவர்ப்பு சத்துள்ள வாழைப்பூ சமைக்க கூடாது. இதில் சமைத்து உண்பதால் ரத்தசோகை குணமாகும். உடல் சூடு தணியும். வெண்புள்ளி போன்ற தோல் பிரச்சனைகள் குணமாகும். இதில் அசைவ உணவை சமைக்க ஏற்றது. இதில் சமைக்கும் உணவை உடனடியாக வேற ஒரு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். பாத்திரத்தில் கீறல் விழுந்து இரும்பு துகள் சமையலில் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பித்தளை பாத்திரங்கள் : நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை தர இதிலுள்ள துத்தநாகம் உதவுகிறது. அஜிரணம் சம்பந்தப்பட்ட நோய்க்கு இந்த பாத்திரத்தில் சமைத்து உண்ணநல்ல மாற்றம் தெரியும். பித்தளையில் உள்ள தாமிரம் ரத்த சோகையை குணப்படுத்தும். இந்த பாத்திரத்தில் புளிப்பு சுவை உள்ள உணவை சமைக்க கூடாது. எலுமிச்சை சாம்பல் கொண்டு இந்த பாத்திரத்தை சுத்தம் செய்யலாம்.

அலுமினியம் பாத்திரங்கள்/டெப்லான் கோட்டிங்

அலுமினியம் பாத்திரத்தில் சமைக்கும் போது, அதிலுள்ள உலோக துகள்கள் உணவில் கலந்து வயிற்றுப்புண், அல்சர் போன்ற பாதிப்பை ஏற்படுத்தலாம். அலுமினிய பாத்திரத்தில் புளிப்பு சுவை உள்ள உணவை சமைக்கும் போது, அது எதிர்வினை புரிந்து, உணவினை நச்சு தன்மை அடைய வாய்ப்பு அதிகம்.

அலுமினிய பாத்திரத்தில் சமைக்க மர கரண்டிகளை பயன்படுத்தவும்.பாத்திரத்தில் புள்ளிகள், கீறல்கள் விழுந்தால் அதை பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். எளிதில் அடிபிடிக்கும் இந்த பாத்திரங்களில், உணவு பொருட்களை நீக்க சுத்தமாக கழுவ வேண்டும். இரும்பு நார் பயன்படுத்தி துலக்க கூடாது.

சிறுநீரக கோளாறுகள்

டெப்லான் கோட்டிங் செய்யப்பட்ட அலுமினிய பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், அதிலுள்ள உலோகம் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாகும். இந்த உலோகம் சிறுநீர் மூலமாக சுத்திகரிக்க முடியாது, இதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க

பாத்திரங்களின் சத்துக்களும்!! அதனை பயன்படுத்தும் முறையும்…

இரும்பு சத்துஅதிகரிக்க.. உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்..!!

One thought on “நீங்கள் உபயோகபடுத்தும் பாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *