செழிப்பு தரும் செவ்வாழையை பார்போமா..
செவ்வாழைப்பழம் அருமையான அதிசயமான பழம். எல்லாவிதமான சத்துக்களும் நிறைந்து உள்ளது.
மாலைக்கண் நோய் ஏற்படுவதைத்தவிர்க்கும் செவ்வாழை.
செவ்வாழையில் விட்டமின் ஏ உள்ளது. நாம் செவ்வாழையை உண்பதால் கண்புரை மற்றும் மாலைக்கண் நோய் வருவது தடுக்கப்படுகிறது.
பற்களில் உள்ள ஈறுகளை வலிமையாக்கும் செவ்வாழை.
செவ்வாழை பழம் சாப்பிடுவதால் பற்களில் உள்ள ஈறுகள் வலிமை பெறும். இதனால் பற்சொத்தை ஏற்படுவதில்லை.
கல்லீரலில் வீக்கம் ஏற்படுவதை சரி செய்யும் செவ்வாழை.
நமது உடலிலுள்ள கல்லீரலில் நச்சுக்கள் படிவதால் கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. செவ்வாழைப் பழம் உட்கொள்வதால் கல்லீரலில் ஏற்படும் வீக்கமானது சரி செய்யப்படுகிறது.
சிறுநீரக கற்களை கரைக்கும் செவ்வாழை.
செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள
சிறுநீரகக் கற்கள் கரைகிறது. அதாவது செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தானது சிறுநீரக கற்களில் உள்ள கால்சியத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது எனவே சிறுநீரக பையில் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
ரத்தத்தின் அளவை அதிகமாக்கும் செவ்வாழை.
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தின் அளவானது அதிகமாகிறது.ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. ஹீமோக்ளோபின் அளவானது இயற்கையாகவே அதிகரிக்கிறது. இதனால் ரத்த சோகை நோய் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
உடல் எடையை அதிகமாக்கும் செவ்வாழை.
செவ்வாழைப் பழம் உட்கொள்வதால் உடல் எடையானது அதிகமாகும்.
எனவே நாம் அனைவரும் தினசரி ஒரு செவ்வாழை பழத்தை உட்கொள்வதால் பல பயன்களை பெறலாம்.
செவ்வாழைப் பழம்