ஆடி அமாவாசை தர்ப்பணம் நன்மைகளும் விரத முறைகளும்
அமாவாசை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே.. அமாவாசையில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை என அனைத்து அமாவாசைகளும் மிக விசேஷம் மிகுந்தவை. அதிலும் மிக மிக சிறந்தது ஆடி அமாவாசையாகும். பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்கும் உகந்த நாளாக இந்நாள் கருதப்படுகிறது. பித்ருக்கள் என்பவர்கள் யார் என்று சில பேருக்கு புரியாமல் கூட இருக்கலாம் அவர்கள் வேறு யாரும் இல்லை நம்முடன் வாழ்ந்து நம்மை பற்றிய சிந்தித்து நாம் நலமாக வாழ வேண்டும் என்று நினைத்த நல்ல உள்ளங்களே பித்ருக்கள். நம்முடைய அப்பா அம்மா பாட்டி தாத்தா மேலும் நம் முன்னோர்கள் இவர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் மேலும் அவர்கள் வாழ்த்துவதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களின் வாழ்த்துக்களால் நீங்கிவிடும்.
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்யும் முறை
ஆடி அமாவாசையில தர்ப்பணம் செய்யும் முறை பற்றி பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம் காலையில் எழுந்து நீராடி விட்டு கோவில்களுக்கு சென்று கூட தர்ப்பணம் செய்யலாம் இப்பொழுது பல கோவில்களில் தர்ப்பணம் செய்யும் முறை உள்ளது இல்லையென்றால் நீங்கள் வீட்டிலேயே எல் தண்ணீரை தட்டில் பரவ விட்டு உங்கள் முன்னோர்களின் பெயர்களை கூறி அல்லது பெயர்கள் தெரியவில்லை என்றால், எனது தந்தை வழி மற்றும் கணவர் வழியில் இறந்த அனைத்து என்னுடைய முன்னோர்களையும் நினைத்து நீங்கள் தர்ப்பணம் செய்யலாம் கோவில்களுக்கு சென்று அவராக இருந்தாலும் சரி வீட்டில் தர்ப்பணம் செய்தவராக இருந்தாலும் சரி மதிய வேளையில் படையல் போட்டு அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா
பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று கேள்வி பலரிடம் உள்ளது கண்டிப்பாக பெண்கள் என்றுமே தர்ப்பணம் கொடுக்கக் கூடாது உங்கள் கணவர் உயிருடன் இருக்கும்போது நீங்கள் தர்ப்பணம் செய்வது தவறாகும் கணவர் இல்லாத பெண்கள் செய்யலாம் அதை போல் கல்யாணமாகாத கன்னி பெண்களும் தர்ப்பணம் செய்யக்கூடாது நீங்கள் அப்படி உங்கள் முன்னோர்களுக்கு வேறு யாரும் செய்வதற்கு இல்லை நாங்கள் தான் செய்ய வேண்டும் என்ன செய்வது என்றால் தர்ப்பணம் செய்யக்கூடாது ஆனால் மதிய வேளையில் படையல் போடும் வேலையை நீங்கள் செய்யலாம் அப்பொழுது உங்கள் முன்னோர்களுக்கு பிடித்த அறுசுவை சைவ விருந்தை நீங்கள் செய்து அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்யலாம் நீங்கள் செய்யும் அந்த விஷயமே உங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு போதுமானது. அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த நாளில் நீங்கள் ஒரு நான்கு நபர்களுக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் .
அன்னதானம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும் அதை மறக்காமல் செய்து விடுங்கள் இப்படி ஆடி அமாவாசை அன்று நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு செய்து வர உங்கள் முன்னோர்கள் அனைவரின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் அடியோடு நீங்கும் என்றும் அவர்கள் உங்களுக்கு துணையாக இருந்து உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பர்.