உடல் எடையை குறைக்கும் வெந்தயத்தின் மகிமை
வெந்தயம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள். வெந்தயத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக விட்டமின் சி விட்டமின் கே மற்றும் நார் சத்துக்கள் நிறைந்து உள்ளது.நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுப்பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடலில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது.வெந்தயத்தை சாப்பிடும் பொழுது மெட்டபாலிசத்தின் அளவானது அதிகமாகிறது. இதனால் நமது உடலில் நாள்பட தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறது.
வெந்தயத்தை உண்பதால் தீர்க்கப்படும் பிரச்சனைகள்.
வெந்தயத்தை நாம் உட்கொள்வதால் நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆகாமல் நார்மலாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. அஜீரணக் கோளாறு,செரிமான பிரச்சனை, மலச்சிக்கல்,போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு வெந்தயம் பயன்படுகிறது
உடல் எடையை குறைப்பது எப்படி?
உடல் எடையை குறைக்கவும் தொப்பையை கரைக்க வும் ஒரு சூப்பரான ட்ரிங்க் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவும், அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றவும், பின்பு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் மற்றும் வெந்தய நீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்தால் போதுமானது.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வர உடல் எடையானது குறைக்கப்படும்.