வாழ்க்கை முறை

ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக்க என்னென்ன செய்யலாம்…!!

லாக் டவுன்-ல் இருப்பதால் பல பேருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பர். நம் இந்த நேரத்தில் நமக்கு தேவையானவற்றை பெற ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக என்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுங்கள்.

இன்றைய நாள்

காலை எழுந்தது முதல் இரவு வரை நாம் வீட்டில் இருக்கும் இந்த தருணங்களை குடும்பத்திற்காவும், அலுவலக வேலைக்காகவும், செலவிட வேண்டும். அலுவலகம் நேரத்தை போலவே வீட்டிலும் உங்களுக்கான அலுவலக நேரத்தை காலை 10 முதல் மாலை 4 வரை வைத்து கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் உங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள்.

குடும்ப மகிழ்ச்சிக்காக

குழந்தைகளுடன் விளையாடுவது, சமையல் உதவிகளை செய்யலாம். குடும்பத்துடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பொழுது போக்குடன் மட்டும் இல்லாமல் குடும்ப மகிழ்ச்சிக்காக அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதும் முக்கியம். குழந்தைகளுக்கு பழைய குடும்ப புகைபடங்கள் காட்டி அதில் ஒவ்வருவரை பற்றியும் அறிமுகம் செய்து வைக்கலாம்.

உங்களுக்கு பிடித்தமான

உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்பதால் உங்கள் மனம் மகிழ்ச்சியுடன் லேசாக இருக்கும். இதனால் உங்கள் நேரம் போவதும் தெரியாது. மேலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள் இதனால் புதிதாக கற்பதுடன் இல்லாமல் கண்களுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதுடன் நல்ல தூக்கம் கிடைக்கும்.

தினமும் உங்கள் நலத்திற்காக சிறிது நேரம் உடல் பயிற்சியோ யோகாவோ செய்யலாம். இதனால் உடல் பருமன் ஆகாமல், ரிலாக்ஸ் ஆகவும் இருக்கும். இதெல்லாம் போக நீங்க ஒதுக்கிய நேரத்தை அலுவலக வேலைக்காக பயன்படுத்தலாம். அலுவலக வேலை வேற, வீட்டில் இருந்து பார்ப்பது வேற என்பதை குடும்ப உறுப்பினருக்கு புரிய வையுங்கள்.

அலுவலக பைலை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் வேலையை உங்கள் அதிகாரி அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் சிறிய டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள். அன்றாடம் முடித்த வேலைகளை உங்கள் மேலதிகாரிக்கு போனில் பேசி உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

இத்தனை நாட்களாக எதை சொன்னாலும் அதை செய்ய நேரம் எங்கே? இருக்கு என்று வறுத்த பட்டவர்களுக்கு, இன்று நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. எதெற்கு நேரம் இல்லை என்று முன்னாள் வறுத்தபட்டீர்களோ? அதை யோசித்து இப்பொழுது செயல்படுத்த ஒரு வாய்ப்பாக கருதுங்கள்.

மேலும் படிக்க

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!! ஏன் சொன்னார்கள்…??

பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *