பல நோய்க்கு தீர்வாகும் வேர் என்னவாயிருக்கும்
வீக்கங்கள் விரைவில் குணமாகனுமா? வெண்படலம் குணமாக மலச்சிக்கலைப் போக்க. சோப்பிற்கு பதிலாக இதை தேய்த்து குளிப்பதால் சரும வியாதிகள் நீங்கும். என்னனு தெரிஞ்சுக்கணுமா சொல்றேன் சொல்றேன். இயற்கையின் படைப்பில் அற்புதமான பல அற்புதங்களை கொண்டுள்ள மரங்கள் மனிதனுக்கு மருந்தாக பயன்படுவதாக சொல்லப்படுகிறது.
- வீக்கங்கள் விரைவில் குணமாகனுமா?
- சரும வியாதிகள் நீங்கும்.
- வெண்படலம் குணமாக மலச்சிக்கலைப் போக்க.
பிராணவாயு
மரங்கள் நிழலை மட்டும் தரவில்லை. அனைத்து உயிர்களும் சுவாசிக்கக்கூடிய பிராணவாயுவை உற்பத்தி செய்கின்றன. புவி வெப்பத்தை குறைத்து மழையைத் தருகின்றன. காய்ந்த மரங்கள் அடுப்பெரிக்க விறகாக பயன்படுகிறது. வெட்டிய மரம் வீட்டு உபயோக பொருளாக மாறுகின்றன. இப்படி மரங்கள் பயன்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
முக்கிய பங்கு
மனித வாழ்வில் மரங்கள் இத்தகைய பயன்களை கொண்டுள்ளதால் நமக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தானே சொல்ல வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் இலுப்பை மரமும் ஒன்று. நிறைய இடங்களில் வெளியூர் செல்லும்போது நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். இவை பல நாடுகளில் அதிகம் வளர்கின்றன. இதன் பூ, காய், பழம், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் நமக்கு மருத்துவத்திற்குப் பயன் தரக்கூடியது.
இலுப்பை வேறு பெயர்
மதுகம், சூலிகம் போன்ற வேறு பெயர்களையும் கொண்டுள்ளன. இலுப்பையின் இலையை மார்பில் கட்டிக் கொள்வதால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இலுப்பையின் காயில் இருந்து வரக்கூடிய பாலை வெண்படலம் மீது தடவ விரைவில் குணமாகும். இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் மலச்சிக்கலைப் போக்கும். இவன் விதையில் உள்ள பருப்பை அரைத்து வீக்கத்தில் அப்ளை செய்து வர குணமடையும்.
சரும வியாதி
இலுப்பை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணை வன்மையும், வனப்பையும் உடலுக்கு தரக்கூடியவை. பிண்ணாக்கு எனப்படுவது எண்ணை நீக்கப்பட்ட சக்கை. இதை ஊறவைத்து உடன் சேர்த்து உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் சரும வியாதிகள் நீங்குகின்றன. சோப்பிற்கு பதிலாக நம் முன்னோர்கள் இவற்றை பயன்படுத்தினர். இதன் வேர் பகுதியை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர மேற்கூறிய நோய்கள் தீரும்.