10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
படித்துவிட்டு அரசு வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில அரசு வேலைகளை உங்களுக்கு பரிந்துரை செய்கிறது.
அஞ்சல் துறை – தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 17.03.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Staff Car Driver பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை பணியிடங்கள்:
அஞ்சல் துறை – தமிழ்நாடு அஞ்சல் வட்டம் அறிவித்த அறிவிப்பில் Staff Car Driver பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் Motor Mechanism தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) வைத்திருக்க வேண்டும்.
Staff Car Driver அனுபவம்:
Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 3 வருடம் Light and heavy Motor Vehicle ஓட்டுவதில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Staff Car Driver வயது விவரம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Tamilnadu Postal Circle சம்பளம்:
Staff Car Driver பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு Pay Matrix Level – 2 as per 7th CPC படி மாத சம்பளம் வழங்கப்படும்.
Tamilnadu Postal Circle தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Trade Test மற்றும் Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Tamilnadu Postal Circle விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து The Senior Manager,
Mail Motor Service, Tallakulam, Madurai 625 002 என்ற முகவரிக்கு 17.5.2022 கடைசி நாளுக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும்.