சிலேட்குச்சி வீடியோஸ்வேலைவாய்ப்புகள்

வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ரெடி – முழு விவரங்கள் இதோ..!

படித்துவிட்டு அரசு வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில அரசு வேலைகளை உங்களுக்கு பரிந்துரை செய்கிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SRF, JRF, Technical Assistant, Facilitator போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே தரப்பட்டுள்ளது.

L

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow, Technical Assistant, Facilitator ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Forestry, Sericulture, Agriculture, Environment Sciences பாடப்பிரிவுகளில் M.Sc, B.Sc, Diploma Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் சம்பள விவரம்:

JRF பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.20,000/- மாத சம்பளமாக தரப்படும்.

SRF பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.16,000/- மாத சம்பளமாக தரப்படும்.

Facilitator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.17,000/- மாத சம்பளமாக தரப்படும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:

Facilitator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

SRF, JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 05.05.2022 மற்றும் 12.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNAU விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து பின் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *