சினிமா

உலகநாயகன் கமல் தன் மகளின் பிறந்தநாளன்று என்ன செய்கிறார் தெரியுமா!

அக்ஷரா ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் உலகநாயகன் கமலஹாசன். பிக்பாஸ் தொலைக்காட்சித் தொடரில் மக்களின் மத்தியில் தன் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உலகநாயகனை பார்த்துப் பூரிக்கும் மகள் அக்ஷரா ஹாசன்.

  • உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனுக்கு இன்று பிறந்தநாள்.
  • இவர் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கை.
  • பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
  • அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் டிரைலர் உலகநாயகன் கமல் வெளியிட்டார்.

அக்ஷரா ஹாசன்

12 அக்டோபர் 1991ல் கமலஹாசனுக்கும் சரிகா தாகூருக்கும் இரண்டாவது மகளாக பிறந்தவர் அக்ஷரா ஹாசன். 2010ல் துணை இயக்குனராக தன் திரையுலக பயணத்தை தொடங்கியவர் அக்ஷரா ஹாசன். அவர் என் தாயின் படத்துக்கே துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகம்

பாலிவுட் என்று சொல்லப்படும் இந்தி திரை உலகத்தில் பாலிவுட் பாட்ஷா அமிதாபச்சன் நடித்த ஷமிதாப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அறிமுகமானார். மணிரத்னத்தின் கடல் படத்தில் நாயகியாக வாய்ப்பை தவிர்த்து துணை இயக்குனராக பணியைத் தொடர்ந்தவர் 2015 இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் படிக்க : ஆஸ்கார் இயக்குனர் இயக்கும் ‘தி லயன் கிங்’ அடுத்த பாகம்

தல படம்

தல அஜித் குமார் நடித்த விவேகம் படத்தில் நடாஷா என்னும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் அக்ஷரா. அதனைத் தொடர்ந்து சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தில் நாசர் மகன் அபி ஹாசனுடன் இணைந்து கலக்கினார் அக்ஷரா ஹாசன்.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

பெண்களுக்கான நற்குணங்களின் பெயரைக் கொண்ட இந்த படம் அதனை சார்ந்தே அமைகிறது. பவித்ரா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷரா ஹாசன். பெரிய பிரபல நடிகர்களுடன் இணைந்து கருத்தான படமாக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணி அளவில் உலக நாயகன் கமலஹாசனால் வெளியிடப்பட்டது. பிறந்தநாள் பெண்ணுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி அசத்தியவர் படத்தின் டிரைலரையும் ரிலீஸ் செய்துள்ளாரா! ஆஹா என்ன ஒரு அப்பா பாசம்!

மேலும் படிக்க : விக்ரம் படம் பாடல் வரிகள்

இந்த டிரைலர் உலக நாயகன் கமலால் இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்டது. 29 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷராஹாசன் மக்களின் சார்பாக சிலேட்குச்சி பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *