உயிரே உயிரே வந்து….
பம்பாய் (Bombay) திரைப்படம் (1995)ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களினாலும் உண்மைச்சம்பவங்களினாலும் பின்னப்பட்ட கற்பனைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடுகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடுஎன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன்
மேலும் படிக்க : மேயாதமான் நாயகியை கண்டு கொந்தளிக்கும் ரசிகர்கள்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடுஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதேஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடுமழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
மேலும் படிக்க : ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பூமி படத்தின் பாடல் வெளியீடு