Jallikattu bulls

வசந்தம் கொஞ்சும் உகாதி பண்டிகையின் சிறப்பு

தமிழ்நாட்டில் சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பு கொண்டாட படுவது போல்,யுகாதி பண்டிகையானது ஆந்திரா,கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாட படும் புத்தாண்டு தினமாகும்,இந்த ஆண்டு உகாதி பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட உள்ளது, இந்த நாளின் சிறப்பு என்ன, இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

Source credit – Google

யுகாதி நாளின் சிறப்பு

பிரம்ம தேவன் இந்த உலகத்தை படைப்பது எப்படி என்று குழப்பத்தில் இருந்த போது, சூரிய தேவனின் அருள் வேண்டி, தவம் புரிந்து இந்த நாளில் தான் முதன் முதலில் உலகத்தை படைக்க தொடங்கிய நாளாகும்

யுகாதி பண்டிகையானது, பிரதமை திதியானது மார்ச் 19ம் தேதியன்று, வியாழன் கிழமை காலை 06.52 மணிக்கு துவங்கி, மார்ச் 20ம் தேதி காலை 04.52 மணி வரை உள்ளது.

யுகாதி கொண்டாடும் முறை

யுகாதி நாளில் அதிகாலை சூரிய உதியத்திற்கு முன் எழுந்து, நீராடி, வாசலில் வண்ண கோளமிட்டு, வண்ண மலர்களால் தோராணமிட்டு, புத்தாடை அனுவிர்ப்பது முறையாகும்

முக்கியமாக இந்த நாளில் பஞ்சாங்கம் படித்து வர போகும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பஞ்சாங்கத்தின் படி கணித்து, மழை,விவசாயம்,மக்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் என கணிப்பது முக்கிய சடங்காகும்

இந்த நாளில் அறுசுவை கொண்ட பச்சடி செய்து இந்த நாளை வரவேற்பது இந்த நாளின் சிறப்பு அம்சமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *