ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

கவனம் சரும ஒவ்வாமை ஏற்பட்டால் கவனிங்க

பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் தோல் ஒவ்வாமையும் ஒன்று. ஒவ்வாமை வராமல் தடுக்க இதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவரை முதலில் அணுகலாம். நமது சருமத்திற்கு ஏதாவது ஒவ்வாமை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் ஒவ்வாமை மருந்துகள் வைக்கப்படும்.

சில நாட்களுக்குப் பிறகு இதனால் எதிர்வினை ஏற்படுகிறதா என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வாமை அதிக தொந்தரவு செய்தால் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகுதல் நலம். மருத்துவர் பரிந்துரைக்கும் ஸ்டீராய்டு மருந்துகளால் விரைவில் குணம் அடையலாம்.

காலமைன் லோஷன் மற்றும் ஹைடிரோ கார்டிசோன் கிரீம்களை பயன்படுத்தலாம். ஐஸ்கட்டி மசாஜ் அல்லது ஜில் தண்ணீரில் குளிக்கலாம். தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். பெரும்பாலான தோல் ஒவ்வாமை நோய் தானாகவே சரியாகிவிடும். அரிப்பு அலர்ஜி நீண்டகாலமாக இருக்கக்கூடிய ஒவ்வாமை பொது பருவத்திலேயே வருகிறது.

அரிப்பு, சிவப்பு மற்றும் வறண்ட சருமம் இவற்றின் பொதுவான அறிகுறிகள் நமைச்சல், சிவப்பு தடிப்புகள், ஆங்காங்கே உடைத்தல் போன்ற பிரச்சனைகள் படை நோய்க்கு ஏற்படும். பூச்சி கடித்தல் மருந்துகள் மற்றும் உணவுகளுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளும் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும். இவை உடனே தோன்றி சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்குள் குணமாகிவிடும்.

உடலுக்கு ஆபத்தான ஒன்று சருமம் சந்திக்கும்போது நோய் எதிர்ப்பு அமைப்பு அதற்கு எதிராக ஆன்டிபாடிகளை வெளியிடுகின்றன. அரிப்பு, தடிப்பு சிவந்து போதல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் உருவாகின்றன. நம் உடலுக்கு சேராத எதிர்வினையாற்றும் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுகின்றன. பூச்சிகள் ஒட்டுண்ணிகள், தூசி உணவுப் பொருட்கள் மற்றும் சில மருந்துகளால் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

காற்றில் உள்ள தூசிகள் தொழிலில் இறங்கும்போது ஒவ்வாமையை தூண்டிவிடும். சில நேரங்களில் சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்து பிறகு எதிர்வினை ஆற்றும் சேவிங் லோசன் வாசனை திரவியங்கள் மற்றும் சன்ஸ்கிரீன் போன்ற வேதிப் பொருட்களால் ஏற்படுகின்றன. புதிய நகை அணியும் போதும் அல்லது சோப்பு போன்றவற்றை பயன்படுத்தும் போதும் உடலில் அரிப்பு ஏற்பட்டால் அது ஒரு வகை சரும ஒவ்வாமை ஆகும். சோப்புகளில் நிக்கல் அல்லது ஒரு வகை ரசாயனம் பயன்படுத்துவதால் இது எல்லோருடைய சருமத்துக்கும் ஒத்துப் போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *