இந்த பொடிகளை உண்பதால் நோயை விரட்ட முடியும்..
காலை எழுந்ததும் கணவர் அலுவலகத்திற்கும், பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லும் வரை, அவசரமாக சமைக்க வேண்டி உள்ளது. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதிரடியாக சமைத்து முடிக்கணும். இதோ உங்களுக்காக சில..
உடம்பு லேசாக
மாதவிடாய் பிரச்னை சரியாகவும், உடம்பு லேசாக, கலகலப்பாக இருக்க இதை செய்து சாப்பிடுங்க. தனியா, சீரகம், சுக்கு, மிளகு, பெருங்காயம் தலா ஒரு ஸ்பூன் எடுத்து பொடி செய்து விட்டு சாதத்தில் நல்லெண்ணெய் கலந்து சாப்பிடவும்.
உடல் சிக் என்று இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, புற்றுநோய் வராமல் தடுக்க, நல்லெண்ணெயில், பூண்டு, உளுந்து, பெருங்காயம், மிளகு சேர்த்த பொடியை சாப்பிடலாம். துவரம் பருப்பு, சீரகம், உளுந்து, தனியா வறுத்து பொடி செய்தும் சாப்பிடலாம். கடலை பருப்பை பொடி வகைக்கு தவிர்ப்பது நல்லது.
வாயில் இருந்து தொடங்கி, நாக்கு, தொண்டை ,உணவுக்குழாய், வயிற்று புண் வரை குணப்படுத்த.. மணத்தக்காளி கீரை இலையை, பச்சையாக மென்று சாப்பிட குணமாகும். இந்த கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்க்கவும்.
நன்கு பசி எடுக்கவும், உடல் கட்டுக்கோப்புடன் இருக்க, உளுந்து ஒரு ஸ்பூன்,பெருங்காயம் சிறிது, சீரகம் ரெண்டு ஸ்பூன் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.
இரும்பு சத்து
முடி கொட்டும் பிரச்சனை, உடம்பு உறுதியாக, இரும்பு சத்துள்ள, கறிவேப்பிலை பொடி சாப்பிடவும். கழுவி காய வைத்த கறிவேப்பிலை, உளுந்து, மிளகு, சீரகம், பெருங்காயம் அனைத்தும் வறுத்து பொடி செய்து நெய்விட்டு சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
நார்சத்து
நார்சத்து நிறைந்த பொடி தனியா, உளுந்து, பெருங்காயம், மிளகு சேர்த்த இந்த பொடியை உண்பதால் ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்கும். உடல் எடை குறையும். பசியை தூண்டும்.
தனியா, சீரகம் சேர்த்து வறுத்த பொடி, பசியின்மை, வயிறு உப்புசம் போக்கும். தனியா, பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்த பொடி ஜீரணத்துக்கு நல்லது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இதை சேர்த்துக்கொள்வது நல்லது.
எடை குறைய
கொள்ளு பொடி செய்தால், நெய் விட்டு சாப்பிடவும். கொள்ளு சூடு நெய் விட்டால் சரி ஆகும். கொள்ளு பொடி தொப்பையை குறைக்கும். எடை குறைய உதவும். கர்ப்பப்பை சுத்தம் செய்யும். குழந்தை பேறு பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை போக்கும். முருங்கை பொடி, கறிவேப்பிலை பொடி, முட்டை பொரியல் செய்யும் போது சேர்த்து செய்யலாம். இரும்பு சத்து டானிக் குடித்த பலம் கிடைக்கும்.