விளக்கு ஏற்றும் திரிகளின் வகைகளும் அவை தரும் பயன்களும்
பொதுவாக நாம் வீடுகளில் தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ நாட்களில் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கமுண்டு. வீட்டில் தீபம் ஏற்றினால் தெய்வ கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலகி நேர்மறையான எண்ணங்கள் வீட்டில் தோன்றும். அவ்வாறு நாம் ஏற்றும் தீபத்திற்கு பயன்படுத்தும் திரிகளில் பல வகை உண்டு ஒவ்வொரு வகை திரிக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் உள்ளது. திரிகளின் வகைகள் மற்றும் அவைகளின் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திரிகளின் வகைகள்
- வெள்ளை எருக்கன் திரி
. 2. தாமரைத் தண்டு திரி
. 3. வாழைத்தண்டு திரி
. 4. சிவப்பு நிற திரி
. 5. பச்சை நிற திரி
. 6. மஞ்சள் நிற திரி
. 7. பஞ்சு திரி
. 8. வெள்ளை நிற திரி
திரிகளின் பயன்கள்
ஒவ்வொரு வகையான திரைகளை பற்றி பார்த்தோம். இனி அந்த ஒவ்வொரு திறக்கும் உண்டான பலன்களை பார்க்கலாம்.
வாழைத்தண்டு திரி
வாழைத்தண்டு திரியில் வீட்டில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர தம்பதிகளுக்கு விரைவில்
புத்திர பாக்கியம் கிடைக்கும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் பொங்கி வழியும். முன்னோர்களின் சாபம் நீங்கி வாழ்வில்
முன்னேற்றம் ஏற்படும்.
தாமரைத் தண்டு திரி
மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த தாமரைத் தண்டு திரியில் தீபமேற்றி வழிபட முன் ஜென்ம
பாவங்கள் தீரும். பில்லி,சூனியம், செய்வினை கோளாறு ஆகியவை விலகும். நேர்மறையான
எண்ணங்கள் வீட்டில் தோன்றும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சிவப்பு நிற திரி
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் காத்திருக்கும் நபர்கள் வீட்டில் சிவப்பு நிற
திரியில் விளக்கு ஏற்றி வழிபட்டு வர விரைவில்
திருமண யோகம் கைகூடும் . மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் உள்ள அனைவரும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள்.