தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை !
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி 2 ஆகிய நாட்களில் சூறாவளி காற்று வீசும். இத்தகைய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது நல்லது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் படி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகின்றது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யலாம். பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துக் கொள்கிறது.
சென்னையில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. தென்தமிழகப் பகுதியில் சூறாவளி காற்று சுமார் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் தென்கிழக்கு பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.