முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி…
ரஷ்யா, உக்ரைன் மற்றும் துருக்கி நாடுகளிடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
துருக்கியின் அன்டால்யா நகரில் இன்று நடைபெற்றது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான ரஆணுவ நடவடிக்கை தீவிரமாகி வரும் நிலையில், பொதுமக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனைதொடர்ந்து துருக்கியில் நடைபெற்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யாவுக்கு சரணடைய வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் என்னிடம் கூறியதாகவும்,”உக்ரைன் சரணடைவதை, ரஷ்யா என்றுமே பார்க்காது” என்று கூறியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய விமானப் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.