செய்திகள்தேசியம்

கொரனா சிகிச்சைக்கு தயாராகும் ரயில் பெட்டிகள்

நாடு முழுவதும் கொரானா சிகிச்சைக்கு இடம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சென்னையிலுள்ள இரயில்வே பெட்டிகள் கொரானா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன என்ற தகவல்கள் கிடைக்கின்றன.

கோவித்-19 பாதிப்பு இந்தியாவில் எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை காட்டுகின்றது. சுமார் 5231 ரயில் பெட்டிகள் கோருவதற்கான சிகிச்சை வழங்க தயாராக உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த பிரம்மாண்ட ஏற்பாடு வைரஸின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இதனை செய்து வருகின்றது. இன்னும் இந்த தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் தினமும் கோவித்தால் பாதிப்படைந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் முழுமையான சிகிச்சை வழங்க தயாராக இருக்க வேண்டும்.

இனி மருத்துவமனையில் இடம் இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து ரயில் பெட்டிகளில் சிகிச்சை வழங்க அரசு மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரயில் பெட்டிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு அவை அனைத்திலும் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகள் கொடுக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை வழங்க தயார் படுத்தப்பட்டு வருகின்றது.

கோவித்-19 இனின் கொடுர தாண்டவம் இந்தியாவில் இன்னும் எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது தெரியவில்லை. இதன் தாக்கத்தால் பெருமளவில் போராட்டங்களை சந்தித்து வரும் இந்த தேசத்தில் தற்போது தான் ஊரடங்கு தளர்வு என்பது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இந்த தொடர்பானது மக்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பை அதிகரித்துக் கொடுக்கும் என்பது தெரியவில்லை.

உலகத்திலேயே ஊரடங்கு அதிகரித்தும் கொரானா குறையாத நாடு இந்தியாவாக தான் இருக்க முடியும். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கோவித்-19 போன்ற சிக்கல்களை எல்லாம் சமாளிப்பது சற்று கடினமே , ஆனால் முறையாக திட்டமிட்டு தயாராக இருக்கும்போது எந்த ஒரு சவாலான நிலையையும் நம்மால் நிச்சயம் எதிர்கொள்ள முடியும். நாம் அனைவரும் ஒன்று பற்று சமூக இடைவெளி பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கும்போது நம்மை சுற்றி எந்த தொற்றும் வராது என்று தகவல்கள் கிடைக்கின்றன.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்குள்ளும் இருக்கவேண்டும் ஆரோக்கியம் மன உறுதி சமூக இடைவெளி சுகாதாரம் ஆகியவை கொரானிவிலிருந்து நம்மை காக்கும் பெரிய ஆயுதங்கள் ஆகும். அச்சத்தை விடுத்து மன உறுதியுடன் செயல்படுவோம். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஆரோக்கியம் ஒன்றே பிரதானமாக இருப்பது சிறந்தது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *