மெட்ரோ சிட்டி மெரிசலாக்கும் சென்னை சுற்றுலா வரலாறும்!
சென்னை முழு விபரம் :
“ மானுடன் வாழும் இடங்கள்
எல்லாம்
மகேஷன் கொடுத்த வாரங்கள்… “
அப்படியாக விளங்கும் தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை பற்றிய முழு விளக்கங்களே வரும் வழிகளில்.
தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை, இன்று தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்குள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாகும். இங்கு தொழிற்சாலைகள், கம்பியூட்டர் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நாடு முதலீடுகள் சமீபகாலமாக பெருமாளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சென்னையில் பேருந்து போக்குவரத்துகள், மருத்துவமனைகள், ரயில் போக்குவரத்துகள், தங்குமிடங்கள், கொரியர் சேவைகள், முக்கிய அரங்கங்கள், தூதரகங்கள், பெருமளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ சிட்டி நம்மை மெரிசலாக்கும் சிட்டி சென்னை ஆகும்.
மேலும் சென்னை நகர மக்கள் மட்டு்மல்லாமல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருவோரும் கண்டுகளிக்கும் வண்ணம் கோயில்கள், நினைவுச்சின்னங்கள், கடற்கரைகள், தொழில்நுட்ப பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுது போக்கு அம்சகங்கள் சென்னையில் நிறைவான வகையில் அமைத்துள்ளன. இவ்வாறு சென்னையில் இருப்போர்க்கும் சென்னைக்கு சுற்றுலா வருவோருக்கு சென்னையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் பின்வருமாறு விளக்கியுள்ளோம்.
சென்னை :
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தென்னிந்தியாவின் முதலாவது மிகப்பெரிய நகரமாகவும், தேசிய அளவில் நான்காவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது.
1639ம் ஆண்டில் வாணிப நோக்கத்திற்காக வந்து ஆங்கிலேயர்கள் விஜய நகர பேரரசிடமிருந்து மதராஸ் பட்டினத்தை பெற்றனர். 1640ல் “ பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன்” இருவரும் 25 ஐரோபியாக்களுடன் குடியேறி புனித ஜார்ஜ் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி 1668ல் கட்டிமுடித்தனர்.
திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சேப்பாக்கம் போன்ற இடங்கள் கிராமமாக இருந்தது. பின்னர் அது மதராஸ் பட்டினத்துடம் சேர்க்கப்பட்டது. இதற்கிடையில் 1746-1758, 1772ல் பிரஞ்சிகாரர்கள் சென்னையை கைப்பற்றினர். அதன் பிறகு நாடு சுதந்திரம் அடையும் வரை சென்னை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. பிரிட்டிஷார் தங்களின் வியாபாரிங்களை பெருக்கிக்கொள்ள சென்னையில் துறைமுகத்தை உருவாக்கினர். தற்போது கூட சென்னை நகரம் பிரிட்டிஷாரின் நினைவுகளை தாங்கி பல்வேறு வகையான கட்டிடங்கள், தேவாலயங்கள், நினைவுச் சின்னங்களோடு திகழ்கின்றது.
சோழ மாற்றம் பல்லவ சாம்ராஜ்ஜியத்திற்கு சென்னை மிக முக்கிய இடமாக விளங்கியது. சோழ மற்றும் பல்லவ சாம்ரஜ்ஜியத்தை நினைவு படுத்தும் வகையில் பல்வேறு வகையான கோவில்களும் கட்டிடங்களும் சிங்காரச் சென்னைக்கு சிறப்பு சேர்க்கின்றன. மேலும் பிரிட்டிஷாரின் மேற்கத்திய கலாச்சார முறைகளையும் இங்கு காணலாம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்த போது தங்கள் நிர்வாகத்திற்கு நான்கு பகுதிகளை பிரித்தது. அப்போதுதான் தென்னிந்தியாவில் சென்னை மாகாணம் 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த ஆண்டுகளில் தொழில் துறை மற்றும் வியாபார ரீதியான வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகரித்தது.
சென்னையில் மிக முக்கிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா துறை நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டன. தற்போது சென்னைக்கு சுற்றுலா வரும் பணிகளுக்கு தேவையான தரமான உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளி நிறுவனங்கள், பழங்கால நினைவு சின்னங்கள், கோயில்கள் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளன.
சென்னை செல்லும் போக்குவரத்து வழிமுறை :
சென்னையில் காமராஜர் மற்றும் அண்ணா தேசிய விமான நிலையங்கள் சென்னையிலிருந்து 17கி மீ. தொலைவில் உள்ள மீனம்பாக்கத்தில் திருசூலம் என்னுமிடத்தில் அமைத்துள்ளது. இந்த விமான நிலையாகலிருந்து இந்தியாவின் எல்லா மிகப்பெரிய மாநகரங்களுக்கும் உலகின் சேவைகள் உள்ளன. இங்கு இந்தியா அரசாங்கத்தின் விமான சேவைகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் நிறைவான விமான சேவைகளை செய்து வருகின்றது.
சாலை வழி போக்குவரத்து :
சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் நிறைவான வகையில் உள்ளன. சென்னை கோடம்பாக்கம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக திகழ்கின்றது. மேலும் தனியார் பேருந்துகளும் சென்னையிலிருந்து பெருமளவில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
ரயில் வழி போக்குவரத்து :
தென்னிந்திய ரயில்வேயின் தலைமையிடமாக சென்னை விளங்குகிறது. இங்கு இரு முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கிருந்து இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் குறிப்பாக வட இந்தியா செல்வோருக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து தான் ரயில் சேவைகள் உள்ளன.
மற்றொன்று சென்னை எழும்பூரில் உள்ள எக்மோர் ரயில் நிலையம் (Egmore railway station) இந்த ரயில் நிலையத்திலிருந்து தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகள் மட்டுமல்லாமல் கேரளவிற்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடல் வழி போக்குவரத்து :
சென்னையிலிருந்து உலகத்தின் பல நாடுகளை இணைக்கும் கடல் வழி போக்குவரத்து மிகச்சிறப்புமாக வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வருவோர்க்கும் வியாபார ரீதியான சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கு சென்னை துறைமுகம் மிகச் சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வழி போக்குவரத்து மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.