சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பிரதமர் போனில் பாராட்டுக்கள் தெரிவித்தார்
அண்மையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மேரி மங்கலம் பகுதியை சேர்ந்த மனோஜ், தங்கம் தம்பதியரின் மகன் வினாயக் தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
வினாயக் அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்று வந்துள்ளார். இவர் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் பட்டியலின மாணவர்களிடையே முதலிடம் பிடித்தார்.
மூன்று படங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கேள்விப்பட்ட இந்திய பிரதமர் மோடி வினாயக்கரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறும் போது பிரதமர் தங்களது மகனை அழைத்து பேசியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இவை அனைத்தும் கல்வியால் கிடைத்த பலன் என்றார்கள்.
இவரின் படிப்பிற்காக பல்வேறு கட்சியினர் உதவித் தொகையையும், பரிசுகளையும் அளித்து வரும் நிலையில் பாஜக கட்சி சார்பில் வினாயக்கிற்க்கு, 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டன.
கேரளாவில் சிபிஎஸ்இ தேர்வில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த கூலித்தொழிலாளியின் மகன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூலித் தொழிலாளியின் மகன் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்ததால் பிரதமர் போனில் அழைப்பு.