சமையல் குறிப்புவாழ்க்கை முறை

தக்காளி ரவை உப்புமா..!!

தக்காளியை வைத்து தக்காளி கூட்டு, தக்காளி குழம்பு, தக்காளி ஜாம், தக்காளி ஊறுகாய், தக்காளி தொக்கு, தக்காளி சட்னி இப்படி நிறைய செய்வதுண்டு. ஆனால் தக்காளியை வைத்து ரவா உப்புமா செய்யலாம். தக்காளி ரவை உப்புமா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா.

தக்காளி ரவை உப்புமா

தேவையான பொருட்கள் : தக்காளி பழம் மூன்று, ரவை கால் கிலோ, எண்ணெய் ஒரு கரண்டி பச்சை மிளகாய் 3, பெரிய வெங்காயம் 2, கடுகு, உளுந்தம் பருப்பு, உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு. தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை : வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவி பொடியாக அரிந்து வையுங்கள். ரவையை லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய தக்காளியையும், சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் தேவையான தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதித்த உடன் ரவையை கொட்டி விடாமல் கிளற வேண்டும்.

ரவை கால் கிலோ, அரை லிட்டர் தண்ணீர் போதுமானது. தண்ணீர் கொதித்தவுடன் ரவையை போட்டு கிளறி இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு இறக்க வேண்டும். சுவையான கமகமக்கும் தக்காளி ரவா உப்புமா தயார்.

நமது தினசரி உணவில் தக்காளியை 100 கிராம் வரை சேர்த்துக் கொள்ள வேண்டும். வேண்டிய அளவில் கிடைக்கும் தக்காளியைக் கொண்டு விதவிதமான பண்டங்களை தயார் செய்ய முடியும். தக்காளியைக் கொண்டு பலவிதமான பண்டங்களை தயார் செய்கிறோம்.

சர்க்கரையை சேர்த்து இனிப்புப் பண்டமும், உப்பு , மிளகாய் போன்றவற்றை கொண்டு காரமான பண்டங்களையும் தயார் செய்கிறோம்,

தக்காளியைக் கொண்டு தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்களை இரு வகையாக பிரிக்க முடியும்.

செய்த உடனே உபயோகப்படுத்த படவேண்டியவை எக்ஸாம்பிள் – குழம்பு, சாம்பார், ரசம், துவையல் முதலியன.

பல நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்த கூடியவை எடுத்துக்காட்டாக – ஜாம், தக்காளி கெட்சப், தக்காளி முதலியன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *