தை மாத கிருத்திகை இன்று வழிபட தவறாதீர்கள்
உத்தராயண காலம் மங்களகரமான காரியங்கள் செய்ய உகந்த காலம். இந்த காலத்தில் தை கிருத்திகை இன்று முருகனை வழிபட உகந்தது. வேண்டியது சிறப்பாக கிடைக்கும். வடக்கு வழி என்று பொருள் படக்கூடிய உத்தராயணம் ஆறு மாதங்களும் தை முதல் ஆனி வரை சொல்லப்படுகிறது.
தட்சிணாயனம் ஆடி முதல் மார்கழி வரை உரிய காலம். தை கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட அனைத்துக் குறைகளும் தீரும். நினைத்ததைப் பெறலாம். என்று வாக்குறுதியை அளித்தார் சிவபெருமான்.
ஆறுமுக கடவுளின் காட்சியைக் கண்டுகளிக்க வாழ்வில் எல்லா குறைகளும் நீங்கி பேறு பெறலாம். எத்தனை பாக்கியம் வாய்ந்த இந்த கிருத்திகையை வழிபட்டு வாழ்வில் எல்லாம் செழிக்க இன்றைய தினம் முருகனை வழிபட தவறாதீர்கள்.
மங்களகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயண காலத்தில் பாரதப்போர் நிகழ்ந்தபோது அடிபட்டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர் நீத்தார்.
மேலும் படிக்க ; ஜெய் ஆஞ்சநேயா போற்றிப் பாட தைரியம் பிறக்கும்