ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

இன்றைய இராசிபலன் பார்ப்போம் வாங்க

சிலேட்குச்சியின் தினசரி ராசிப்பலன் மக்களின் தினசரிப் பலனகள் தெரிந்துகொள்ள உதவும். இன்றைய முக்கியமான உங்கள் பலன்கள் முடிவுகளை எடுக்கலாம். ஆகையால் இதனை முழுமையாகப் படிக்கவும்.

  • 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரக்காரர்களுக்கான பலன்கள் அறியலாம்.
  • ராசிப்பலன் சிறப்பானது ஆகும்.
  • நல்ல பலன்கள் மூலம் இன்றைய முக்கியப்பணிகளை தொடரலாம்.

மேசம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உறவினர்கள் உடன் வந்து இணைவார்கள். பெரியோர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் எண்ணியது கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

வடக்கு நோக்கி உங்கள் திசை அதிர்ஷ்டத்தை தரும். சிவப்பு நிறத்தை இந்த நாள் உங்களுக்குச் சிறப்பைத்தரும். அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு உதவி கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு கீர்த்தி உண்டாகும். நினைத்தது நேரத்திற்கு கிடைக்கும் முன்னேற்றம் பரணி நட்சத்திரத்தினருக்கு பெருகும்.

ரிஷபம்

ரிஷப ராசியினக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். பாராட்டுகள் அதிகம் கிடைக்கும். வெற்றிகள் பல இன்று கிடைக்கும். உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டம் தரும். இன்றைய நாள் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துங்கள். ரோகிணி நட்சத்திரனருக்கு சரியான அங்கீகாரம் என்று கிடைக்கும். கிருத்திகை நட்சத்திர தன்னம்பிக்கை பெறுவார்கள் மிருகசீரிஷம் நட்சத்திரம் வழிகாட்டிகள் பல பெறுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு கவனமாக இருக்க வேண்டிய தினம் இன்று ஆகும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை பின்பற்றுங்கள். நம்பி செயல்படுங்கள் நண்பர்களுடன் ஒற்றுமை இருக்க வேண்டும். உங்களுக்கு வடக்கு திசை இன்று உகந்தது. சிவப்பு நிறத்தை இன்று பயன்படுத்துங்கள்.

அதிர்ஷ்டமான எண்ணாக இன்று ஒன்று அமைந்திருக்கின்றது. மிருகசிரிஷ நட்சத்திரக்காரர்கள் இன்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தானாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். புனர்பூசம் நட்சத்திரம் பொறுமையுடன் இருக்க வேண்டும் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கடகம்:

கடக ராசியினருக்கு இன்று அமைதியை பின்பற்ற வேண்டிய நாள் ஆகும். தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். நட்பு வட்டாரங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்கள் துணை இருப்பார்கள். நம்பிக்கையுடன் செயல்படலாம். உங்களுக்கென்று. சுபகாரியங்கள் நடைபெறும் அதிர்ஷ்ட திசை தெற்கு ஆகும்.

இரண்டாம் எண் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இன்று இன்றைய நாள் வெள்ளை நிறம் உங்களுக்கு நல்ல வாய்ப்பைத் தரும். புனர்பூச நட்சத்திரனத்தினர் அமைதியை பின்பற்றவும். பூச நட்சத்திரக்காரர்கள் நிம்மதியாக இருக்கலாம். ஆயில்ய நட்சத்திர உங்களுடையதா அப்போ நீங்கள் நல்ல எண்ணங்களை சிந்திக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசியினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உத்தியோகம் பணிகளில் மாற்றங்கள் நடைபெறலாம். தாமதங்களை அமைதியாக ஏற்கவும் அவசரப்பட வேண்டாம். தடைகளை கண்டு அஞ்ச வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் இருக்கட்டும்.

வடக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். உறவுகள் உங்களுக்குத் துணையாக இருக்கும். இன்று பச்சை நிறம் உகந்ததாக இருக்கும். இன்று அதிர்ஷ்டத்தை தரும் எண் 5 ஆகும் . சிம்மராசி மகம் நட்சத்திரத்தினர் பாதுகாப்பாக இருக்கும். பூரம் நட்சத்திரக்காரர்கள் எதிர்பார்ப்பை உண்டாகும் நாளாக இருக்கும். உத்திர நட்சத்திரக்காரர்கள் தைரியத்துடன் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய நாள் ஆகும்.

கன்னி

கன்னி ராசியினர் புத்துணர்ச்சியுடன் இன்று இருக்கலாம். எண்ணங்களில் தெளிவு அவசியம் ஆகும். உதவிகள் கிடைக்கும் பயணங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள் செல்வ வளம் கிடைக்கும். சேகரிப்பு பெருகும். உங்களுக்கு மேற்கு திசை உகந்தது இன்று. 6 ஆம் எண் இன்று உங்களுக்கு உகந்தது ஆகும்.

இளம்பச்சை நிறம் இதம் தரும். புத்துணர்ச்சியான நாள் உத்திர ராசியினருக்கு கிடைக்கும். அஸ்தம நட்சத்திரத்தினருக்கு உதவி செய்வார்கள். சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வம் கிடைக்கும் சேமிக்க செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசியினர் சவாலான சூழலை எதிர்கொள்ள வேண்டும். தொழிலில் கவனம் அவசியம் இருக்க வேண்டும். புத்திக்கூர்மையுடன் செயல்படுங்கள், சிந்தனைகளை ஒருமை படுத்துங்கள். லாபம் கிடைக்கும். வியாபார பயணங்கள் பொதுவாக உருவாகும். இறைவழிபாடு ஆன்மீக காரியங்களில் அக்கறை செலுத்துங்கள், ஆரோக்கியம் உண்டாகும். வீட்டிற்கு புது வரவுகள் கிடைக்கும். ஆபரணங்கள் வரவு உண்டாகும்.

இன்று கிழக்கு திசை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இளம் மஞ்சள் நிறம் உகந்தது ஆகும். இரண்டாம் எண் உங்களுக்கு உதவும் சித்திரை நட்சத்திரத்திற்கு நெருக்கடிகள் குறையும். சுவாதி நட்சத்திரத்திற்கு வாய்ப்புகள் கிடைக்கும் விசாக நட்சத்திரம் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு இன்றைய நாள் விருப்பமாக இருக்கும். உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகளில் பொறுமையாக செயல்பட வேண்டும். நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளில் வெற்றி கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்புடன் பணியாற்றுவார்கள்.

உங்களுக்கு இன்று வடக்கு திசை அதிர்ஷ்டத்தைத் தரும். இன்று அதிர்ஷ்ட எண்ணாக 7 இருக்கின்றது. நீல நிறம் என்று உங்களுக்கு உகந்தது விசாக நட்சத்திரம் தாமதத்தை எதிர்கொள்வார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் அனுஷம் நட்சத்திரத்தினருக்கு வேண்டியது கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று வரவு உருவாகும் ஆரோக்கியத்தில் கவனம் இருக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மாற்றங்கள் பெருகும் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கப் பெறலாம்.

வார்த்தைகளில் கவனம் தேவை. இன்றைய நாள் தெற்கு திசை உங்களுக்கு உகந்தது. அதிர்ஷ்ட எண் 4 ஆகும். அதிர்ஷ்டமான நிறம் மஞ்சளாக அமைந்திருக்கின்றது. மூல நட்சத்திரத்திற்கு வரவு பெருகும். உத்திராட நட்சத்திரத்தினருக்கு புது மாற்றங்கள் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்திற்கு விருப்பம் அதிகரிக்கும் நம்பிக்கையுடன் பணியாற்றுவார்கள்.

மகரம்

மகர ராசியினருக்கு நன்மை கிடைக்கும். நிதானத்துடன் செயல்படவேண்டும். அமைதியாக இருக்கவும். ஆதரவு கிடைக்கும் போட்டிகளில் நிதானம் தேவை ஆகும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். திறன் பெருகும் முயற்சி செய்ய வேண்டும் தொடர் முயற்சி வெற்றியைத் தரும்.

உங்களுக்கென்று அதிர்ஷ்டமாக மேற்கு திசை இருக்கின்றது. அதிர்ஷ்ட எண் 8 ஆக இருக்கின்றது. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறமாகும். உத்திராட நட்சத்திரம் எதையும் யோசித்து செய்ய வேண்டும். அவிட்ட நட்சத்தினர் புரிதலுடன் இருக்க வேண்டும் திருவோண நட்சத்திர வளம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு மாற்றங்கள் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும். கவனமாகச் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் நினைத்தது நடக்கும். பிரச்சினைகள் குறையும். வாய்ப்புகள் பெருகும்.

வடக்கு திசை இன்று உங்களுக்கு உகந்தது. அதிர்ஷ்டமான எண் ஒன்பது ஆகும். மேலும் நீல நிறம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அவிட்ட நட்சத்தினருக்கு மாற்றங்கள் இன்று உண்டாகும். சதயம் நட்சத்திரத்தினருக்கு பொறுமை அவசியமாக இருக்க வேண்டும் பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பொறுப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று லாபம் பெருகும். ஆரோக்கியம் பெருகும் மனம் தெளிவடையும் நினைத்தது நடக்க வாய்ப்பிருக்கின்றது. காரியம் நடைபெறும் உங்களுக்கு என்றால் அதிர்ஷ்டமான திசை மேற்கு ஆகும். அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம் ஆகும். ஐந்தாம் எண் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

மேலும் படிக்க : ஜாக்கிரதையா இருங்க சந்திராஷ்டமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *