சனிப் பிரதோஷ வழிபாட்டு முறைகள்
சனிப் பிரதோஷ வழிபாட்டு முறைகள். பிரதோஷ வழிபாடுகள் சனிக்கிழமை அன்று பிரதோஷம் வருவது மிகவும் விசேஷம். சனி பிரதோஷத்தில் நந்தியை வணங்கி வழிப்படுவதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். இன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளி சேர்க்காமல் உண்பது வழக்கம்.
சாதாரண பிரதோஷ நேரத்தில் சோமசூக்த பிரதட்சணம் செய்வதால் ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும். சனி பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 5 வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றைய தினம் சனி மஹா பிரதோஷம் அனைவரும் முடிந்தவர்கள் ஆலயம் சென்று ஈசனை வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவனை வழிபட்டு சிவனுக்குரிய நாமங்களை உச்சரித்து எளிமையாக வீட்டிலேயே பூஜை செய்யலாம்.
மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபங்கள் யாவுமே சனி பிரதோஷ நாளில் செய்யப்படும் போது பல மடங்கு பலன்களை தரும் என்று புராணங்களில் கூறப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் அதாவது 4-6 சூரியன் மறையும் நேரத்திற்குள் வழிபடும் இந்த நேரத்தில் நமச்சிவாய மந்திரத்தை ஜபிப்பதால் நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்ச மா பாதகங்கள் யாவும் அழிந்து போகும் என்று கூறப்படுகிறது.
நந்தியம் பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும் என்று கூறுகின்றனர். மேலும் சனி பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. சனிக் கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசித்தால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் வந்து சேரும். சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். இன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது.
இன்று ஈசன் ஆலகால விஷத்தை உண்டு. அகிலத்தை காத்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகா பிரதோஷம் என்று சொல்லப்படும். பிரதோஷ காலம் என்பது மாலை 4 – 6.30 என சொல்கின்றனர்.
இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனை தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது. பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும்.
சனி மஹா பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண பிரதோஷ பலனைத் தரும் என்று ஆன்மீக நம்பிக்கையாக கூறப்படுகிறது. பிரதோஷ வேளையில் நந்திக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.