செய்திகள்டெக்னாலஜிதேசியம்

இன்று அறிமுகம் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ்

சீன நிறுவனமான ஜியோமியின் கீழ் இயங்கும் ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

குறைந்த விலை கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதால் இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பை ரெட்மி ஸ்மார்ட் போன்கள் பெற்று விட்டன.

அந்த வகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோட் 9 புரோ மேக்ஸ் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது குறிப்பிடத் தக்கது.

இதன் ஸ்டோரேஜ் தன்மைக்கு ஏற்ப இதன் விலை Rs.16,999 Rs.18,499 Rs.19,999 என விற்பனைக்கு வருகிறது. இத்துடன் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பேட்டரி 5020 எம்ஹெச் மில்லியம் ஹவர்ஸ் திறன் கொண்டது. நெட்வொர்க் – 4ஜி வோல்ட், செல்பி கேமரா- 32 mb, மெயின் கேமரா – 64 எம்பி, இன்டர்னல் ஸ்டோரேஜ் -128 ஜிபி.

ரேம் – 8ஜிபி, ப்ராசசர் – ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 720 ஜிஎஸ், ஓசி சிஸ்டம் – ஆன் ஷிப் டிஸ்ப்ளே 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *