இன்றைய ராசிபலன் பஞ்சாங்கம்
இன்று பிப்ரவரி ஆறாம் தேதி திங்கட்கிழமை தை மாதம் 23ஆம் நாள் தேய்பிறை பிரதமையுடன் தொடங்குகின்றது. இன்றைய நாள் பிரதமை திதியுடன் தொடங்குகின்றது. திங்கள்கிழமை சந்திர ஹோரை ஆதிக்கத்தில் காலை 6:00 மணிக்கு தொடங்குகின்றது. இன்று தைப்பூசம் முடிந்து பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி வரும் நாள் . இன்றைய நாள் இனிய நாளாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
- ஹோரை: செவ்வாய் ஹோரை காலை 09:47 முதல் 10:43
வரை அடுத்து சூரிய ஹோரை - இன்றைய நட்சத்திரம்: ஆயில்யம், பிப்ரவரி 06, பிற்பகல்
03:03 வரை - திதி: பிரதமை, பிப்ரவரி 07, காலை 02:19 வரை
- சூரிய உதயம்: காலை 06:59
சூரிய அஸ்தமனம்: மாலை 06:12 - யோகம்: சௌபாக்கியம், பிப்ரவரி 06, பிற்பகல் 03:24 வரை
அடுத்து சோபனம்
- கரணம்: பாலவம், பிப்ரவரி 06, பிற்பகல் 01:09
வரை - ராகு காலம்: காலை 08:23 முதல் 09:47 மணி
வரை - எமகண்டம்: காலை 11:11 முதல் 12:36 மணி வரை
- நல்ல நேரம்: பிற்பகல் 02:00 முதல் 03:24 மணி வரை
- நேர மண்டலம்: +05:30 நகரம்

ஆயில்யம், பிப்ரவரி 06, பிற்பகல் 03:03 வரை
- குணாதிசயங்கள்: தர்ம காரியங்களில் ஆர்வம், யோக சக்தி ஆற்றலை (குண்டலினி சக்தி) பெருக்கும் ஆர்வம்
- குறியீடு: சுருண்ட பாம்பு, வட்டம் அல்லது சக்கரம்
- விலங்கு: ஆண் பூனை
- கிரஹாதிபதி: புதன்
- கணம்: ராட்சஸ கணம்
- அதி தேவதை: சர்ப்பம் – பாம்பு
- பலம்: தத்துவவாதி ,புத்திசாலி,பன் முகத் திறமை, சாமார்த்தியம், சுதந்திரம், பல்வேறு வேலைகள் உடையவர், பிறரை மகிழ்வுறச் செய்பவர், கல்விமான்,தலைமைத்துவம், உற்சாகப்படுத்தினால் சாதிக்கக்கூடியவர், செல்வம் நிறைந்தவர், ஆன்மீக ரகசியம் அறிந்தவர், ஆர்வமான விஷயங்களுக்காக நேரத்தை செலவிடுபவர், கவர்ச்சிமிக்கவர், ஆன்மீக காரியங்களால் ஆதாயம் பெறுபவர்
- பலவீனம்: நிலையற்ற மனம், கவலை, அமுக்கம், ஏமாற்றுதல், அக்கறையற்ற போக்கு, அமைதியின்மை, சாதுரியமின்மை, பிரபலமற்றவர், சமூக திறம் குறைந்தவர், விதிகளை மீறக் கூடியவர், வெளிக்காட்டாத மனநிலை, சொந்தம்/உரிமை கொண்டாடுதல், ரகசியம், அதிக பேச்சு, பாராட்டை விரும்புதல், பாதுகாப்பின்மை, அசட்டை, விலகி இருத்தல், மனப்பாங்கு, தேவைகளை முரட்டுத்தனமாக அடைதல், பொறாமை, பகை உள்ளம், தனிமை, நன்றியின்மை, நயமின்மை.
