ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஞாயிறு கிழமையான இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் ஆனி மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.7.2022

திதி : இன்று பிற்பகல் 03.09 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி .

நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.26 மணி வரை ஆயில்யம். பின்னர் மகம் .

நாமயோகம் : இன்று காலை 10.35 மணி வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

கரணம் : இன்று அதிகாலை 02.34மணி வரை வணிசை. பின்னர் பிற்பகல் 03.09 மணி வரை பத்தரை. பின்பு பவம் .

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.26 மணிவரை மரணயோகம். அடுத்து அதிகாலை 05.56 மணிவரை அமிர்த யோகம்

நல்ல நேரம்

காலை: 06.15 முதல் 07.15 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்

மேஷம் இன்றைய ராசிபலன் –

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். அல்சர் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்களும் மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்லவேண்டும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் –

பெண்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய மொபைல் போன் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்

நண்பர்களுக்கு தனவரவுடன் கூடிய லாபகரமான நாளாகவே இன்றைய நாள் அமைகிறது. எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும்.

கடகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டாக வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். தங்களின் எதிர்பார்ப்பின் படி வேலை மாற்றத்திற்கான சுமூகமான சூழல் இன்று நடைபெறும்.

கன்னி

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும் வெற்றிகரமாக தன்னுடைய பணிச்சுமைகளை எதிர்கொள்வர். சொந்தத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் உண்டு.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கலைத்துறை பத்திரிக்கை துறை எழுத்துத் துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைச் செய்யும் நாளாக செல்லும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு

நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் தனவரவு உண்டு. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும் சுபகாரிய முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும்.

மகரம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் தம்பி தங்கைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் இவற்றில் நிதானமாக இருக்கவும்.

கும்பம்

திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற அடிப்படையான செயல்கள் என்று துவங்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

மீனம்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறைய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *