இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் மாசி 23 ஆம் தேதி மார்ச் 7, 2022, திங்கட்கிழமை
திதி: பஞ்சமி இரவு 10.33 மணிவரை அதன் பின் சஷ்டி
நட்சத்திரம்: பரணி விடிகாலை 05.54 மணிவரை அதன் பின் கிருத்திகை
யோகம்: மஹேந்திரம் நாமயோகம்
கரணம் : பவம் அதன் பின் பாலவம்
சித்தயோகம் விடிகாலை 05.54 மணிவரை அதன் பின் மரணயோகம்
நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்
இன்றைய ராசிபலன்
பிலவ வருடம் மாசி 23 ஆம் தேதி மார்ச் 7, 2022, திங்கட்கிழமை, பஞ்சமி இரவு 10.33 மணிவரை அதன் பின் சஷ்டி, பரணி விடிகாலை 05.54 மணிவரை அதன் பின் கிருத்திகை, சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணங்களால் நன்மை நடைபெறும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறால் சுப விரைய செலவுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது
மிதுனம்
இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் நன்மை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
கடகம்
இன்றைய தினம் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.
சிம்மம்
இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்றைய தினம் உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். உடன்பிறப்புகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம்.
கன்னி
இன்றைய தினம் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு அதிகமாகும். மன அழுத்தமாக உணர்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
துலாம்
இன்று ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே கலகலப்பு அதிகமாகும். இன்று குடும்பத்தில் சுப செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.
விருச்சிகம்
இன்றைய தினம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணம் கடன் கிடைக்கும். வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
தனுசு
இன்று உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வேலைப்பளு அதிகமாகும். இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். மனதில் நிம்மதி குறையும்.
கும்பம்
இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழிலில் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
மீனம்
இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவு அதிகமாகும். இன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.