இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.
இன்றைய பஞ்சாங்கம்
நாள்: பிலவ வருடம் மாசி 05ஆம் தேதி பிப்ரவரி 17, 2022, வியாழக்கிழமை
திதி: பிரதமை இரவு 10.40 மணிவரை அதன் பின் துவிதியை
நட்சத்திரம்: மகம் பகல் 04.10 மணி வரை அதன் பின் பூரம்
யோகம்: அதிகண்டம் நாமயோகம்
கரணம் : பாலவம் அதன் பின் கௌலவம்
அமிர்தயோகம் மாலை 04.10 மணி வரை அதன் பின் சித்தயோகம்
நேத்திரம் 2, ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 9-00மணி முதல் 10-30 மணி வரை
இன்றைய ராசிபலன்:
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்னியம் நன்றாக இருந்துவரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது லாபம் பெறுவீர்கள்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்குச் சிறந்த நாளாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தனவரவு உண்டு புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள் குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு.
உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி வடிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நேயர்களுக்கு மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். என்றாலும் சற்றுக் கூடுதலான முயற்சிகள் தேவைப்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும், என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்து குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் நிம்மதியான நாளாக என்று இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் மனதில் எழும்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு அதிகமாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டு. ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஆதாயம் பெறுவார்கள்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். பெண்களுக்கு இனிமையான நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpioநண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும். இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாலையில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் நாளை வந்து சேர வாய்ப்பு உண்டு.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. உடல் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வகையில் சுபச் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களை திட்டமிடுவீர்கள்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
இன்றைய நாள் இனிய நாளாக அமையும் எதிர்பார்த்த பணவரவு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் மாணவராக இருக்கும் குடும்பத்தில் அமைதி நிலவும் பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது-
மீனம் இன்றைய ராசிபலன்Pisces
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். அலைச்சல் அதிகமாகும் தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.