ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன்கிழமை இன்று இன்று புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 08 ஆம் தேதி புதன்கிழமை 24.8.2022

திதி : இன்று காலை 09.53 மணி வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

நட்சத்திரம் : இன்று மாலை 03.39 மணி வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 02.20 மணி வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

கரணம் : இன்று காலை 09.53 மணி வரை தைத்துலம் . பின்னர் இரவு 10:49 மணி வரை கரசை. பின்பு வணிசை .

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை :04.45 முதல் 05.45 மணி வரை
மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷ ராசிக்கு இன்றைய நாள் சுப காரியங்கள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் ஆன்மிக நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வர வாய்ப்புள்ளது. ஆன்மிக பணிகளுக்கான செலவழிப்பீர்கள், செயலில் ஈடுபடுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிலும் அலட்சியாமாக இருக்க வேண்டாம். மதியத்திற்கு மேல் உங்களின் பொருளாதார நிலை மேன்மை ஏற்படும்

ரிஷபம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

மிதுனம்

கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளித்து குடும்ப அமைதியை நிலை நாட்டுவார்கள் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்

கடகம்

மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் ஆராய்ச்சிகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் சொத்துக்கள் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் திட்டங்கள் போன்றவை மனதில் உருவாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல உறவுகள் நெருங்கி வருவதற்கான நல்ல நாள்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள் ஆகும். விருந்தினர் அல்லது உறவினர் வருகை உண்டு. இவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் இவர்கள் வெற்றி அடைவார்கள்.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும் பெண்களுக்கு சிறந்த நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவும் உண்டாக வாய்ப்பு உள்ளது சற்று கவனம் தேவை.

மகரம்

அன்பர்களுக்கு நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் தென்படும்.

கும்பம்

நண்பர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாள் ஆகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவார்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

மீனம்

நண்பர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு சற்று அழுத்தத்தைக் கொடுப்பது கல்வி நிலையை மேம்படுத்தும். சந்தோஷம் உண்டு. வழக்கு வகைகளில் வெற்றியடைவீர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *