இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்
செவ்வாய்க்கிழமை இன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 07 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.8.2022
திதி : இன்று காலை 07.51 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.06 மணி வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
நாமயோகம் : இன்று அதிகாலை 01.41 மணி வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
கரணம் : இன்று காலை 07.51 மணி வரை பாலவம் . பின்னர் இரவு 08:52 மணி வரை கௌலவம். பின்பு தைத்துலம் .
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.04 மணி வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 01.06 மணி வரை மரண யோகம்.பின்பு சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை :04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2
இன்றைய ராசிபலன்:
மேஷம்
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
ரிஷபம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கான உகந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கடகம்
நேயர்களுக்கு இந்த நாள் சிறப்பான தொரு நாளாகவே அமையும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். வெளிநாடு வெளியூர் போன்றவற்றில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
சிம்மம்
நேயர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. பிரயாணம் வெளியூர் வாசம் போன்றவற்றிற்கான திட்டமிடுதல் அவை சம்பந்தப்பட்ட சிந்தனைகள் ஏற்படும் காலம் இது. மனதில் மகிழ்ச்சி நிலவும் முகம் பிரகாசமாக தோன்றும்.
கன்னி
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாக தெரியும். ஒரு சில பேருக்கு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பயனும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் காலம் இது.
துலாம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உத்தியோகத்திலும் தொழில் துறையிலும் தேவையான அளவில் உதவி செய்வார்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும் .
விருச்சிகம்
உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.
தனுசு
நண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும்.
மகரம்
அன்பர்களுக்கு இனிய நாளாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்குவரும் நல்ல நாள் ஆகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
கும்பம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் மன நிம்மதி கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.
மீனம்
நேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமையும். சற்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும்.